சிவகார்த்திகேயனாவது அஜித்துடன் மோதுவதாவது: அதில் ஒரு விஷயம் இருக்கு
சென்னை: சிவகார்த்திகேயன் அஜித்துடன் மோதவில்லை. தல பிறந்தநாள் சிவகார்த்திகேயனுக்கு ராசியான நாள் ஆகும்.
பொங்கலுக்கு ரஜினி படத்துடன் அஜித் படம் வருகிறதாம் என்று சில மாதங்களாக கோடம்பாக்கத்தில் பேசினார்கள். தற்போதோ மே 1ம் தேதி அஜித் படத்துடன் சிவகார்த்திகேயன் படம் வருதாமே என்று பேசுகிறார்கள்.
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் மிஸ்டர் லோக்கல் படம் மே 1ம் தேதி ரிலீஸாகிறது.

தல 59
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் தல 59 படம் அவரின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக அஜித் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

சிவா
அஜித் படத்துடனே மோதும் அளவுக்கு வந்துவிட்டாரா சிவகார்த்திகேயன். எதற்கு அவருக்கு இந்த தேவையில்லாத வேலை என்று ஆளாளுக்கு பேசத் துவங்கியுள்ளனர். மே 1ம் தேதி சிவாவுக்கு ராசியான நாள் என்பதால் அதை தேர்வு செய்திருப்பார்கள்.

மே 1
அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி சிவகார்த்திகேயனுக்கு ராசியான தேதி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மே 1ம் தேதி வெளியான சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படம் வெற்றி பெற்றது. இதையடுத்தே அந்த தேதியை தேர்வு செய்திருப்பார்கள்.

வரவேற்பு
மிஸ்டர் லோக்கல் படம் தல 59 படத்துடன் வருகிறது என்பதை அறிந்தால் அஜித் சந்தோஷப்படுவார். யார் படம் வந்தாலும் அவர் பட வசூல் பாதிக்காது என்பது விஸ்வாசம் பட வசூலில் இருந்தே தெரிந்துவிட்டது. இதற்கிடையே தல 59 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











