Ajith Brother: ஹாலிவுட் படத்தில் கமிட் ஆன அஜித்தின் அண்ணன்.. உடம்பை என்னாமா குறைச்சிருக்காரு!
சென்னை: நடிகர் அஜித் குமார் தற்போது துபாயில் உள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு நடுவே நடக்கும் போரினால் துபாயில் இருந்து இன்னும் சென்னைக்கு திரும்பவில்லை. ஆனால் அவர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார் என்று அவரது மேலாளர் தெரிவித்தார். இப்படி இருக்கையில் நடிகர் அஜித் குமாரின் அடுத்த படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது எப்போது தொடங்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இப்படி இருக்கையில் அஜித்தின் அண்ணன் அனில் குமார் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையையும் குறைத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் என்ட்ரி: அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " திருமண தகவல் சேவை தளமான Jodi365.com-ன் நிறுவனரும் சி.இ.ஓ-வுமான 'மிஸ்டர் மேட்ச் மேக்கர்' (Mr. Matchmaker), ஆகிய நான் தற்போது ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறேன். 'Coco & Nut' என்ற சர்வதேச ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் அவர் ஒரு முக்கியக் காட்சியில் நடிக்க உள்ளேன். இப்படத்தில் நான் ஒரு கதாபாத்திரமாக அல்லாமல், நிஜ வாழ்க்கையில் நான் ஒரு வெற்றிகரமான மேட்ச் மேக்கராக இருப்பது போலவே, திரையிலும் 'Mr. Matchmaker' ஆகவே நடிக்கவுள்ளேன்.
மியூசிக் டைரக்டர்: கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பாடல் பதிவில் நான் பங்கேற்று இருந்தேன். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்த துள்ளலான பாடலின் போது அவர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொடங்குகிறது.
ஃபிட்னஸ்: ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அலி படத்திற்காக மேற்கொண்டது போன்ற மிகக் கடினமான பயிற்சிகள் தேவையில்லை என்றாலும், கேமராவிற்கு முன்னால் இன்னும் பொலிவோடும் வலிமையோடும் தோன்ற முடிவு செய்துள்ளேன் இதற்காக "Mens sana in corpore sano"என்ற தத்துவத்தின் அடிப்படையில், அடுத்த 100 நாட்களுக்குத் தன்னை இன்னும் உடற்தகுதியுடன் மாற்றிக்கொள்ளும் உடற்பயிற்சியில் ஈடுபடவும் உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். இது அஜித் படத்தின் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











