Ajith: மே 1-க்கு தல படம் ரிலீஸ்.. அஜித் செத்து பிழைத்தது எல்லாம் வீண் போகல.. ரசிகர்களே தயாராகுங்க!
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியானது. ஆனால் அஜித் 2024ஆம் ஆண்டு இறுதியில் இருந்து தீவிரமாக கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். இப்படி இருக்கையில் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா மாட்டாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. அப்படி இருக்கும்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் 64 வது படத்தை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஆனால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படவே இல்லை, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும், பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று நாட்கள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. தற்போது மார்ச் மாதமும் வந்துவிட்டது. இப்படி இருக்கும்போது அவரது 64 வது படம் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

இப்படி இருக்கையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் தற்போது பேசப்பட்டு வருகிறது. அதாவது அஜித்தின் கார் ரேஸ் ஆனது இயக்குநர் எல். விஜய்யால் ஆவணப்படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தான் இயக்குநர் விஜய்க்கு இதை ஆவணப்படமாக உருவாக்கி வெளியிடுவதை விட, ஒரு திரைப்படமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றி உள்ளது.
மே-1க்கு படம் ரிலீஸ்: இது குறித்து அவர் அஜித்திடம் கூறியதும், அஜித் அதை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது ஆவணப்படத்தை படமாக வெளியிட அஜித் தரப்பில் எல்லா வேலைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறதாம். இது மட்டும் இல்லாமல் படத்தை மே 1ஆம் தேதி வெளியிட அவர்கள் முடிவு எடுத்திருப்பதாகவும், படத்திற்கான பின்னணி இசை பணிகளில் ஜி.வி. பிரகாஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

செத்து பிழைத்தது வீண் போகல: ஆவணப்படத்தை படமாக உருவாக்கி திரையரங்கில் வெளியிடுவதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக கொண்டு செல்ல முடியும் என்பதால் இதனால், கார் ரேஸை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலை சுலபமாக மாறுகிறது என்பதால் அதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் தியேட்டர் ஓனர்களிடம் பேசியும், நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் பேசியும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த அஜித் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்களோ அஜித் கார் ரேஸில் செத்து பிழைத்தது எல்லாம் கொஞ்சம் கூட வீண் போகல என்று பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











