வரிசையில் நிற்காத அஜித்தை திட்டிய பெண்: வைரல் வீடியோ
Recommended Video
சென்னை: அஜித் வாக்களிக்கச் சென்ற இடத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
லோக்சபா தேர்தல் நாள் அன்று அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வாக்களித்தார். இது அனைவருக்கும் தெரியும்.
வழக்கமாக வரிசையில் நிற்கும் அஜித் இம்முறை அவ்வாறு செய்யவில்லை.
அஜித்
அஜித் எப்பொழுதுமே வரிசையில் நின்று தான் ஓட்டு போடுவார். இம்முறை அவர் முதல் ஆளாக வாக்களித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் வரிசையில் நிற்காமல் உள்ளே செல்ல ஒரு பெண் அவரை திட்டும் வீடியோ வெளியாகியது.
கார்
அஜித், ஷாலினி வந்த கார் கதவை போலீஸ்காரர் ஒருவர் திறந்துவிட்டார். அதுவும் சர்ச்சையாகியுள்ளது. ஒரு நடிகரின் கார் கதவை போலீஸ்காரர் எதற்காக திறக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் ரசிகர்கள்
அஜித்தை ஒரு பெண் திட்டிய வீடியோவை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.

விஜய்
அஜித் திட்டு வாங்கும் வீடியோவை வெளியிட்ட விஜய் ரசிகர்களை தல ரசிகர்கள் கலாய்த்துள்ளனர். விஜய் வரிசையில் நின்றதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கலாய்த்துள்ளனர். அஜித், விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் மோதுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











