விஸ்வாசத்தில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம்... சிவாவிடம் கேட்டுக்கொண்ட அஜித்

விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனர் சிவாவிடம் அஜித் கேட்டுக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை: விஸ்வாசம் படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும் வகையில் காட்சிகளை அமைக்கும்படி, இயக்குநர் சிவாவிடம் அஜித் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரம், வேதாளம், விவேகம் பட வெற்றிகளைத் தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக நடிகர் அஜித் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்திற்கு விஸ்வாசம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Ajiths decision for Nayanthara

அஜித்திற்கு ஜோடியாக இப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். ஏற்கனவே பில்லா, ஆரம்பம், ஏகன் உள்ளிட்ட படங்களில் இவர்கள் ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர்.

பொதுவாக அஜித் படங்களில் நாயகர்களுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது போல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த வழக்கத்திலிருந்து சற்று மாறுதலாக விஸ்வாசம் படத்தில் நயன் தாராவிற்கும் கனமான பாத்திரமாம்.

காரணம், நானும் ரவுடி தான், அறம், மாயா, டோரா என சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நயன்தாரா நடித்து வருகிறார். தொடர்ந்து அப்படங்கள் வெற்றியும் பெற்று வருகிறது. எனவே, இப்படத்திலும் அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என இயக்குநர் சிவாவிடம் அஜித் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X