திரும்ப வருவேன்...கண்டிப்பா வருவேன்...அஜித் வசனத்தை பேசி ரசிகர்களுக்கு ஸ்ரீசாந்த் நம்பிக்கை
திருவனந்தபுரம் : இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த், ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டிருந்தார். கேரளா மாநிலத்தில் சையது முஷ்தக் அலி கோப்பையின் மூலம் மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்பி உள்ளார்.
மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியில் பங்கேற்க ஸ்ரீசாந்த் ஆர்வமாக காத்திருக்கிறார். ஐபிஎல் ஏலத்தின் போது அனைத்து அணிகளும் இவரை நிராகரித்த போதும், தொடர்ந்து விடாமல் முயற்சி செய்து வருகிறார்.

நிராகரிக்கப்பட்ட ஸ்ரீசாந்த்
292 வீரர்கள் இடம்பெற்ற ஐபிஎல் ஏலத்தில் இந்த ஆண்டும் ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் தேர்வுக்குழுவை கவர அவர் தன்னால் ஆன முயற்சிகளை செய்து வருகிறார். இந்நிலையில் அஜித்தின் புகழ்பெற்ற வசனம் ஒன்றை பேசி, தனது ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஜித் வசனத்தை பேசி வீடியோ
ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், காரில் அஜித் நடித்த விவேகம் படத்தின் பாடலை கேட்டபடி பயணம் செய்து கொண்டிருக்கிறார். அதில், இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட...தோத்துட்டனு சொன்னாலும் நீயா ஒத்துக்கிற வரை உன்னை யாராலும், எப்பவும் தோற்கடிக்க முடியாது...Never Ever give up... என்ற அஜித் வசனத்தை ஸ்ரீசாந்த் பேசி உள்ளார்.

திரும்ப வருவேன்
நிச்சியமா வருவேன்...கண்டிப்பா வருவேன்...நம்புங்க...லேட்டஸ்டா வருவேன் என ஸ்ரீசாந்த் பேசி, அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ஸ்ரீசாந்த் ரசிகர்கள் மட்டுமல்ல, அஜித் ரசிகர்களும் லைக் செய்து, வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
குஷியான அஜித் ரசிகர்கள்
அஜித் தற்போது நடித்து வரம் வலிமை படம் எப்போது ரிலீசாகும் என காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் அஜித்தின் வசனத்தை பேசி, வீடியோ வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











