அஜீத்தின் அடுத்த படம்... நல்ல தயாரிப்பாளருக்காகக் காத்திருக்கும் இயக்குநர்!
அஜீத்தின் 55-வது படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆடியோ ரிலீஸ் வரை இப்படியே போக்கு காட்ட வேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டு செய்கிறார்கள் போலிருக்கிறது. போகட்டும்...
அஜீத்தின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை இயக்குபவர் சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய சிவா. மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியலும் ரெடி. படத்தின் கதை, திரைக்கதை பக்காவாக தயாராகிவிட்டது.
இப்போது புதிய சிக்கல். சரியான தயாரிப்பாளர் அமையவில்லையாம்.
அஜீத் படத்தைத் தயாரிக்க வேண்டுமென்றால் குறைந்தது 70 கோடியாவது வேண்டும் என்ற நிலை. காரணம் அவர் சம்பளம் மட்டுமே 50 கோடியைத் தொடுகிறது. வரி செலுத்தியது போக, முழுவதும் வெள்ளையாகத்தான் வேண்டும் என்பது அவர் போடும் முதல் நிபந்தனை.
தயாரிக்க முன் வந்த பிவிபி சினிமாஸ் ஏற்கெனவே சில சிக்கல்களில் இருப்பதால், வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜீத்.
நல்ல தயாரிப்பாளர் தேடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சிவா.


Click it and Unblock the Notifications











