நயன்தாராவால் கண்ணில் காயப்பட்டார் அஜீத்
மும்பை: விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், நயன்தாரா , அஜித் மற்றும் ஆர்யாவுடன் இணைந்துஹோலி கொண்டாடுவது போன்று படமாக்கப்பட்ட காட்சியால் அஜீத்க்கு கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாம்.
ஒட்டுமொத்த திரையுலகமும் உண்ணாவிரதம் இருந்த நேரத்தில் அஜித்தும்,நயன்தாராவும் ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர்
விஷ்ணுவர்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்திற்காக. ஆர்யா, டாப்சியும் கூட இதில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.

மும்பையில் ஹோலி
படத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடும் காட்சி இடம்பெறுகிறது. அதை மும்பையிலேயே படமாக்க இயக்குனர் திட்டமிட்டார். இதற்காக அங்கு ‘செட்' போடப்பட்டது. கலர் பொடி பெட்டி பெட்டியாக கொண்டு வரப்பட்டது.

ஒருவர் மீது ஒருவர் பொடி தூவி
அஜீத்தும், நயன்தாராவும் கலர் பொடியை ஒருவர் மீது ஒருவர் வீசி ஆடினார்கள். 500க்கும் மேற்பட்ட துணை நடிகர் நடிகைகளும் கலர் பொடி தூவினார்கள்.

அப்படியே தத்ரூபமாய்
நிஜத்தில் ஹோலி கொண்டாடியது போலவே கலர் புல்லாக அது இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். இந்த பாடலை இம்மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. அதை முடித்துவிட்டு அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

கண் பட்டு விட்டதே
இதற்கிடையே , யார் கண் அஜீத் மீது பட்டதோ தெரியவில்லை, கலர் பொடி கண்ணில் பட்டதால், அஜீத்திற்கு கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாம். சரியான சிகிச்சை எடுத்துக்கொண்ட பின்னர் தான் கண்ணின் எரிச்சல் சரியானதாம். பிறகு திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடர்ந்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











