அஜித் தந்தை மறைவு... ஏகே 62 சொன்னபடி டேக் ஆஃப் ஆகுமா...? குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை: முன்னணி நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.

Recommended Video

Ajith வீட்டில் சோகம்! குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோள்

அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துணிவு படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் ஏகே 62வில் கமிட் ஆகியிருந்தார் அஜித்.

ஆனால், தற்போது அஜித்தின் தந்தை உயிரிழந்துள்ளதால் ஏகே 62 திரைப்படம் சொன்னபடி உருவாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

அஜித் வீட்டில் சோகம்

அஜித் வீட்டில் சோகம்

அஜித்தின் துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தது. இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய் வரை வசூலித்ததால், அஜித்தின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதன்படி அஜித்தின் 62வது படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பது உறுதியானது. ‘ஏகே 62' என்ற இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது, ஆனால் அவர் அதிலிருந்து விலகிவிட்டார். இந்நிலையில், அஜித்தின் அப்பா சுப்ரமணியன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

அஜித்தின் தந்தை கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துள்ளார். இதுகுறித்து அஜித்தும் அவரது சகோதரர்களும் கூட்டாக அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஏகே 62 அப்டேட்

ஏகே 62 அப்டேட்

இந்நிலையில், தந்தை சுப்பிரமணியத்தின் இறுதி சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம் என அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்மூலம் தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்கள் நேரில் வரவேண்டாம் என அவர் மறைமுகமாகக் கூறியுள்ளார். இதனால் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அஜித்தின் ஏகே 62 திரைப்படம் சொன்னபடி டேக் ஆஃப் ஆகுமா எனவும் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குழப்பத்தில் ரசிகர்கள்

குழப்பத்தில் ரசிகர்கள்

ஏற்கனவே ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். இதனால் இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதனையடுத்து மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அப்டேட் வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது. விரைவில் ஏகே 62 அப்டேட்டை லைகா வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதமாகவே இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

லைகா நம்பிக்கை

லைகா நம்பிக்கை

இப்படியான சூழலில் அஜித்தின் அப்பா சுப்ரமணியன் இன்று உயிரிழந்ததால், ஏகே 62 படப்பிடிப்பு உடனே தொடங்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் ஏகே 62 அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அஜித்தின் அப்பா உயிரிழந்துவிட்டதால் சில நாட்கள் தாமதமாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால், கண்டிப்பாக ஏகே 62 டேக் ஆஃப் ஆகும் என்றே லைகா தரப்பில் உறுதியாக சொல்லப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்களும் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X