ஆக்சன் மாஸ் டிராமா ரெடி.. விஜய்க்காக பக்கா கதையை உருவாக்கும் சிவா.. செம அப்டேட்!
நடிகர் விஜய்க்காக இயக்குனர் சிவா கதை ஒன்றை எழுதி வருகிறார்.
Recommended Video
சென்னை: நடிகர் விஜய்க்காக இயக்குனர் சிவா கதை ஒன்றை எழுதி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து விரைவில் படம் எடுக்க இருக்கிறார்கள்.
சிறுத்தை படம் மூலம் தமிழகத்தில் கவனம் ஈர்த்தவர் சிவா. அதன்பின் அஜித்துடன் இணைந்த இவர் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என்று வரிசையாக நான்கு படங்களை எடுத்தார்.
இதில் அனைத்து படங்களும் அஜித்திற்கு மாஸ் ஹிட் அடித்தது. அதிலும் வீரம், விசுவாசம் இரண்டும் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் வாங்கியது.

அடுத்து என்ன
இந்த நிலையில் தற்போது அஜித்திடம் இருந்து சிவா கொஞ்சம் பிரேக் எடுத்துவிட்டு வேறு நடிகர்களை வைத்து படம் எடுக்க உள்ளார். இவர் நடிகர் ரஜினிக்கு சொன்ன கதை ஓகே ஆகிவிட்டது. இதனால் ரஜினியுடன் சிவா விரைவில் படம் பண்ண உள்ளார்.

தர்பார் எப்படி
முதலில் தர்பாருக்கு அடுத்து சிவா உடன் ரஜினி இணைவார் என்று செய்திகள் வந்தது. ஆனால் தர்பார் ஷூட்டிங் மூலம் கவரப்பட்ட ரஜினி ஏஆர் முருகதாஸிடம் இன்னொரு கதை கேட்டுள்ளார். தன்னுடைய அடுத்த படத்தையும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.

தள்ளிப்போனது
இதனால் தற்போது ரஜினி - சிவா இணையும் படம் ஒரு வருடம் தள்ளிப்போய் உள்ளது. 2021 தொடக்கத்தில்தான் ரஜினியும் சிவாவும் இணைந்து படம் செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் இதுவும் 100% உறுதியாகவில்லை.

இப்போது என்ன
இதனால் ரஜினி வருவதற்கு முன் விஜயை வைத்து ஒரு படம் கொடுக்க சிவா திட்டமிட்டுள்ளார். ஆம் சிறுத்தை சிவாவும் விஜயும் இணைந்து விரைவில் படம் எடுக்க உள்ளனர். இதற்காக தற்போது சிவா தீவிரமாக திரைக்கதை எழுதி வருகிறார்.

அவரே சொன்னார்
இயக்குனர் சிவாவே இந்த விஷயத்தை குறிப்பிட்டார். நேற்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவா, விஜய் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, விரைவில் விஜயை வைத்து படம் எடுப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கதை
சிவா உருவாக்கி வரும் இந்த கதை பக்கா குடும்ப ஆக்சன் கதை என்று கூறுகிறார்கள். குடும்ப உணர்வுகளை மையமாக வைத்து விஜய் நடித்து நீண்ட நாள் ஆகிவிட்டது என்பதால் இந்த படத்தில் கண்டிப்பாக அவர் நடிப்பார் என்று கூறுகிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கம் படத்துக்கு அடுத்து விஜய் இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











