ஆரம்பம் படத்தை பார்த்து அஜீத் அதிருப்தியா?: விஷ்ணுவர்தன் விளக்கம்
சென்னை: ஆரம்பம் படத்தை பார்த்து அஜீத் அதிருப்தி அடையவில்லை மாறாக சந்தோஷப்பட்டு என்னை கட்டிப்பிடித்தார் என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த ஆரம்பம் படம் கடந்த 31ம் தேதி ரிலீஸானது. படம் ரிலீஸான ஒரு வாரத்திற்குள் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஆரம்பம் படம் குறித்து அஜீத் வருத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.

லாஜிக்கே இல்லை
ஆரம்பம் படத்தை பார்த்த அஜீத் குமாருக்கு திருப்தி ஏற்படவில்லை என்று செய்திகள் வந்தன. மேலும் படத்தில் லாஜிக்கே இல்லாமல் பல காட்சிகளை வைத்துள்ளார்களே என்று வேதனைப்பட்டார் என்று கூறப்பட்டது.

அயர்ன் பாக்ஸ்
படத்தில் பச்சிளம் குழந்தை மீது அஜீத் சூடான அயர்ன் பாக்ஸை வைக்க முயலும் காட்சியை பார்த்து அவர் வருத்தப்பட்டார் என்று கூறப்பட்டது.

விஷ்ணுவர்தன்
அஜீத் வருத்தப்பட்ட விவகாரம் குறித்து விஷ்ணுவர்தனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, படத்தை பார்த்த அஜீத் சந்தோஷத்தில் என்னை கட்டிப்பிடித்தார். என் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். மேலும் ஆர்யா, டாப்ஸியின் கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றார் என விஷ்ணு தெரிவித்தார்.

அஜீத் குடும்பமும்
தனது குடும்பத்தார் ஆரம்பம் படத்தை பார்த்தனர் என்றும் அது அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றும் அஜீத் கூறியதாக விஷ்ணு தெரிவித்தார். அஜீத்துக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார். படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் வில்லத்தனமாக காட்சிகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களை நாங்கள் அவருக்கு எடுத்துக் கூறினோம் என்றார் விஷ்ணு.


Click it and Unblock the Notifications











