முடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்!

நடிகர் அஜித் நடித்த கடைசி 4 படங்கள் வரிசையாக சாதனை படைத்து ஓடிக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

Recommended Video

ரகசியமாக தொடங்கிய அஜித்தின் 60 படப்பிடிப்பு-வீடியோ

சென்னை: நடிகர் அஜித் நடித்த கடைசி 4 படங்கள் வரிசையாக சாதனை படைத்து ஓடிக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்று நடிகர் அஜித் இப்போதும் கூட அழைக்கப்படுகிறார். பல வருடங்களுக்கு முன்பு தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் கூட அஜித்திற்கு இன்னும் ரசிகர் பலம் கொஞ்சமும் குறையவில்லை.

அதேபோல் முதல் நான்கு நாள் ஓப்பனிங் கலெக்சன் அவருக்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வேகமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. கடைசியாக வெளியான நான்கு படங்களே இதற்கு தக்க உதாரணம் ஆகும்.

என்ன படம்

என்ன படம்

அதன்படி வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம், ஆகிய நான்கு படங்கள் வரிசையாக அஜித்திற்கு பிளாக் பஸ்டர் படங்களாக மாறியுள்ளது. இன்டர்நெட் காலத்தில் இந்த படங்கள் பெரிய சாதனை படைத்து இருப்பதாக தியேட்டர் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ரோகினி திரையரங்கம் இது தொடர்பான விவரங்கள் வெளியிட்டுள்ளது.

பொதுவாக எப்படி

பொதுவாக எப்படி

இணையம் வந்த பின் ஒரு படம் 30 நாட்களுக்கு மேல் ஓடுவது என்பது மிகவும் சவாலான காரியம். பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட ஒரு மாதத்திற்கு மேல் தியேட்டரில் இருப்பது கிடையாது. சில ஹீரோக்களின் படங்கள் இரண்டு வாரங்கள் தாண்டுவது கூட சவாலான விஷயம் ஆகும்.

ஆனால் இப்போது

ஆனால் இப்போது

ஆனால் அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் ஆகிய நான்கு படங்கள் வரிசையாக 50 நாட்களை தாண்டி ஓடியுள்ளது. அதன்படி வீரம் 60 நாட்கள், வேதாளம் 58, விவேகம் 55, விசுவாசம் 88 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக சென்னை ரோகினி தியேட்டரில் இன்னும் அஜித் படங்கள் முழு கூட்டத்துடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்போது என்ன

இப்போது என்ன

அதே சமயம் இந்த நான்கு படங்களை விட நேர்கொண்ட பார்வை இன்னும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் இந்த படம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பெண்களும் இந்த படத்தை புகழ்ந்து வருகிறார்கள்.

எப்படி

எப்படி

இந்த நான்கு படங்களும் எப்படி வரிசையாக ஹிட் அடித்து ஓடியதோ அதேபோல் நேர்கொண்ட பார்வையும் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்கொண்ட பார்வை வெளியாகி ஏற்கனவே 40 நாட்கள் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X