ஹெலிகாப்டர் ட்ரோனுடன் தல... வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

By

சென்னை: நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம், நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் இது.

இந்தியில், அமிதாப்பச்சன் நடித்திருந்த வேடத்தில் அஜித் நடித்திருந்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதைத் தொடர்ந்து வலிமை படத்தில் நடிக்கிறார் அஜித்.

யாமி கவுதம்

யாமி கவுதம்

'நேர்கொண்ட பார்வை'யை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக யாமி கவுதம் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

காவல்துறை அதிகாரி

காவல்துறை அதிகாரி

இந்தப் படத்தில் அஜித், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. இப்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

சென்னையில் செட்

சென்னையில் செட்

சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், இந்தப் படத்துக்காக பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இங்கு படத்தின் அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க உள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பொங்கலை முன்னிட்டு படத்தின் அப்டேட் ஏதாவது வரும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். எந்த அறிவிப்பும் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அஜித், காஞ்சிபுரம் போலீசாருடன் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆலோசனை

ஆலோசனை

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித், படத்துக்காக ஆயுதமில்லாத ஹெலிகாப்டர் டிரோனை இயக்குவது பற்றி ஆலோசனைப் பெற்றார் என்றும் அதற்காக அவர்களைச் சந்தித்தார் என்றும் அப்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X