துப்பாக்கியுடன் தல அஜித்தின் தாறுமாறு போஸ்... வைரலாகும் ஸ்டில்.. அடுத்த போட்டிக்கு ரெடியாகிட்டாரா?

By

சென்னை: நடிகர் அஜித்தின் புதிய ஸ்டில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

துப்பாக்கியுடன் நிற்கும் நடிகர் அஜித்

அஜித்குமார் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார்.

இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

வில்லனாக

வில்லனாக

அஜித் ஜோடியாக, ஹூமா குரேஸி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், படமானது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என்றும் பிரசன்னா நடிப்பதாகவும் கூறப்பட்டது. பிரசன்னா அதை மறுத்தார்.

அஜித் காயம்

அஜித் காயம்

இதற்கிடையே நடிகர் நவ்தீப் வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இவர் அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் சேசிங் காட்சியின்போது, விபத்து ஏற்பட்டது என்றும் இதில் அஜித்துக்கு காயம் ஏற்பட்டது என்றும் காயத்துடனேயே நள்ளிரவு வரை ஷூட்டிங்கில் கலந்துகொண்டு முடித்துக் கொடுத்தார் என்றும் படக்குழு தெரிவித்திருந்தது.

துப்பாக்கியுடன் அஜித்

துப்பாக்கியுடன் அஜித்

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. அஜித்திற்கு துப்பாக்கிச் சுடும் விளையாட்டில் அதிக ஆர்வம். அதற்காக முறைப்படி பயிற்சி எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த 45 ஆவது தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் அவர் கலந்துகொண்டார்.

பயிற்சியில் அஜித்

பயிற்சியில் அஜித்

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதையடுத்து இப்போது அவர் துப்பாக்கிச் சுடுவது போன்ற புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த வருட துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் அவர் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. அதற்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X