ரசிகர்களோடு எடுத்துக்கொண்ட படம் வைரல்... கூலர்ஸில் கலக்கும் கூல் அஜித்!

By Vignesh Selvaraj

சென்னை : தனது 58-வது படமான 'விசுவாசம்' படத்தில் அஜித் வித்தியாசமான லுக்கில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்காக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து கருப்பு முடிக்கு மாறியிருக்கிறார் தல. இவர் ரசிகர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'விசுவாசம்' படத்தை சிறுத்தை சிவா இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக அஜித்தும் சிறுத்தை சிவாவும் இணைகிறார்கள்.

Ajith's latest photo with fans goes viral

இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னர் சத்தமில்லாமல் நடைபெற்று முடிந்தது. அஜித்தை தவிர்த்து, படத்தில் பணியாற்றும் டெக்னீசியன்கள் மட்டுமே இந்த பூஜையில் கலந்து கொண்டனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதத்தில் தொடங்க இருக்கிறது.

'விசுவாசம்' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக வெற்றி, எடிட்டராக ஆண்டனி ரூபன் ஆகியோர் பணியாற்றுவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் நாயகி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

'விசுவாசம்' படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் கருப்பு முடியோடு நடிக்கிறார் எனும் தகவல் முன்பே வெளியானது. அதை உறுதிப் படுத்தும் வகையில் அஜித் யங் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் சமீபமாக வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், அஜித்தின் இன்னொரு லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் அஜித் கருப்பு முடி மற்றும் லேசான தாடியுடன் இளமையாகத் தோற்றமளிக்கிறார். மேலும், கருப்பு டி-சர்ட் மற்றும் கூலர்ஸ் அணிந்து செம ஸ்டைலிஷான கெட்டப்பில் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X