வலிமை படப்பிடிப்பு தளத்தில் தல அஜித்… வைரலாகும் புகைப்படம் !
சென்னை : வலிமை படப்பிடிப்புத்தளத்தில்அஜித்துடன் ரசிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் பிளாக் அண்ட் பிளாக்கில் மாஸாக இருக்கிறார் அஜித்.
இணையத்தில் வெளியான சிறிது நேரத்தில் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

இயக்கம்
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அஜித்திற்கு ஜோடியாக ஹூமோ குரோஷி நடித்துள்ளார்.

திடீரென
வலிமை படம் குறித்து கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு.

ரசிகர்கள் மகிழ்ச்சி
வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு யங் அண்ட் ஸ்மார்ட் லுக்கில் வெறித்தனமாக பைக் ஓட்டுகிறார் அஜித். மோஷன் போஸ்டரில் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மிகவும் ரசிக்கும் படி இருந்தது. இணையத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி வருகின்றனர்

படப்பிடிப்புதள போட்டோ
இந்நிலையில், வலிமை படப்பிடிப்புத்தளத்தில் அஜித்துடன் ரசிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவில், அஜீத் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு, கறுப்பு சட்டை, கறுப்பு பேண்டுடன் மாஸாக இருக்கிறார். இணையத்தில் வெளியான இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











