வலிமை மாஸ் அப்டேட்.. சீறிப்பாயும் அஜீத்.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: வலிமை திரைப்படத்தின் அப்டேட்டை பல மாதங்களாக தவமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் இயக்குனர் வினோத்.

வினோத் அஜீத்குமார் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இணைந்த நிலையில் அதே கூட்டணி இப்பொழுது வலிமை திரைப்படத்தில் பணியாற்றி வருகிறது.

வலிமை திரைப்படத்திலிருந்து ஏதாவது ஒரு அப்டேட் வெளியாகாதா என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் இயக்குனர் வினோத் வெளியிட்ட புகைப்படம் இணையத்தளத்தை பீஸ் பீஸ் ஆக்கி வருகிறது.

ஹச் வினோத் இயக்கி வருகிறார்

ஹச் வினோத் இயக்கி வருகிறார்

நடிகர் அஜித்குமார் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து இப்போது நடித்து வரும் வலிமை திரைப்படத்தையும் ஹச் வினோத் தான் இயக்கி வருகிறார்.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

" சதுரங்க வேட்டை" என்ற அற்புதமான படைப்பை கொடுத்ததை தொடர்ந்து "தீரன் அதிகாரம் ஒன்று" என்ற மிரட்டலான கதைக்களத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய வினோத் மூன்றாவது படத்திலேயே தல அஜீத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அதில் பிரபல ஹிந்தித் திரைப்படமான பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்தார்.

பெண்களை மிகவும் கவர்ந்தது

பெண்களை மிகவும் கவர்ந்தது

அஜீத் குமார் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில், வயதான தோற்றத்தில் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் கொண்டாட வைத்ததோடு குறிப்பாக பெண்களை மிகவும் கவர்ந்தது.

போனிகபூர் நிறுவனம்

போனிகபூர் நிறுவனம்

இவ்வாறு தொடர் வெற்றிகளை கொடுத்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது மீண்டும் அஜீத் குமாருடன் இணைந்து வலிமை திரைப்படத்தை இயக்கி வர நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் நிறுவனம் இந்தத் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது.

டிபி ஸ்டேட்டஸ்களாக

டிபி ஸ்டேட்டஸ்களாக

வலிமை திரைப்படத்திலிருந்து ஒரு அப்டேட்டாவது வெளியாகாத என பல மாதங்களாக தவம் கிடந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் இயக்குனர் வினோத் வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம் இணையதளத்தை துவம்சம் செய்து அனைவரின் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் டிபி ஸ்டேட்டஸ்களாக மாறி உள்ளது.

ஆக்ரோஷமாக பைக் ஓட்டும்

ஆக்ரோஷமாக பைக் ஓட்டும்

இயக்குனர் வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த போட்டோவில் அஜித் தாறுமாறாக பைக் ஒட்டியவாறு பிரன்ட்வீலை தூக்கிக்கொண்டு ஆக்ரோஷமாக பைக் ஓட்டும் இந்த ஆர்ப்பரிக்கும் புகைப்படத்தை பார்த்த ஆனந்தத்தில் ரசிகர்கள் இப்பொழுது என்ன செய்வதென்று தெரியாமல் துள்ளிக்குதித்து கொண்டாடி வரும் நிலையில் இந்த புகைப்படம் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ஒரு போட்டோவுக்கு இப்படினா படம் ரீலீஸ் ஆனா எப்டி இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X