Don't Miss!
- News
தடுத்த ஆரிய வந்தேறிகள்.. தமிழர்களை எழுத வைத்து விடியல் தந்த கருணாநிதி பேனா -கார்த்திகேய சிவசேனாபதி
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஜித் எப்பவும் அல்டிமேட் தான்...லண்டன் ஷாப்பிங்கில் அஜித் செய்த காரியம்...கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை : அஜித் என்ன செய்தாலும் ரசிகர்கள் அதை டிரெண்டாக்கி, கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தான் எப்போதுமே வேற மாதிரி என்பதை அஜித்தும் ஒவ்வொரு முறையும் நிருபித்து வருவாதல், பட ரிலீஸ் இல்லாவிட்டாலும் அஜித் பற்றிய பேச்சாகவே உள்ளது.
Recommended Video
வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த கதையில் அஜித் இரண்டு கெட்அப்களில் நடித்து வருகிறார்.
ஏகே 61 படத்திற்காக பல மாதங்களாக நீண்ட வெள்ளை தாண்டி, காதில் கம்மல், குல் லென்ஸ் என செம கெத்தாக வலம் வருகிறார் அஜித். ஒவ்வொரு முறையும் ரசிகர்களுடன் இணைந்து அஜித் எடுத்துக் கொள்ளும் போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இந்தியன்
2
ஷூட்டிங்
எப்போது?..
அடுத்தடுத்து
வெளியான
அப்டேட்..
ரசிகர்கள்
ஹேப்பி
!

ஐரோப்பாவை கலக்கும் அஜித்
ஐதராபாத்தில் போடப்பட்ட சென்னை மவுண்ட் ரோடு வங்கிக் கிளை போன்ற செட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடித்து வந்த அஜித், தற்போது ஷுட்டிங்கிற்கு பிரேக் எடுத்துக் கொண்டு ஐரோப்பாவில் பைக் டுர் சென்றுள்ளார். அங்கு அஜித் பிஎம்டபிள்யு பைக், கார் என சுற்றி வந்த போட்டோக்கள், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், ரசிகர்களுக்கு தானே கைப்பட எழுதி, கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை எழுதியது என அனைத்தும் வைரலாகின.

இது தான் அஜித் டுர் போனாரா
ஐரோப்பா டுர் முடித்து விட்டு வந்ததும் அஜித் மற்றொரு புதிய லுக்கிற்கு மாற போகிறாராம். இந்த லுக்கில் தான் க்ளைமாக்சில் தோன்ற போகிறாராம். அதனால் தான் புதிய லுக்கிற்கு மாறுவதற்கு முன் டுர் கிளம்பி போயிருக்கிறாராம். விரைவில் அஜித் இந்தியா திரும்பியதும் புதிய லுக்கிற்கு மாறி, புனேயில் நடக்கும் ஷுட்டிங்கில் கலந்து கொள்ள போகிறாராம்.

ரசிகர்களுக்கு ஆறுதல் தந்த விஷயம்
ஏகே 61 படம் ஜுலை இறுதிக்குள் முடிக்கப்பட்டு விடும். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய போகிறார்கள் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது டிசம்பர் அல்லது 2023 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் ஏகே 61 படம் ரிலீஸ் செய்யப்படும் என குறப்படுவதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதற்கிடையில் ஆகஸ்ட் மாதம் ஏகே 61 ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படும் என்ற தகவல் பரவி வருவதால் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

லண்டனில் அஜித் செய்த காரியம்
இந்நிலையில் செம குலாக பெல்ஜியம் ,லண்டன் என அஜித் சுற்றி வந்த போட்டோக்கள் வைரலாகின. இந்த சமயத்தில் இன்று லண்டனில் கடை ஒன்றில் ஷாப்பிங் சென்ற அஜித், தனது கார்டை கொடுத்து ஏதோ பொருள் வாங்குகிறார். பில் கவுண்ட்டரில் இருப்பவரிடம் கைகுலுக்கி பேசும் அஜித், பில்லில் கையெழுத்து போட்டு அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு அங்கிருந்து அஜித் நகரும் போது, எதிரே பெண் ஒருவர் வருகிறார். அவருக்கு வழிவிட்டு அஜித் நகர்ந்து நின்றுள்ளார். இந்த சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

எப்பவும் அல்டிமேட் தான்
அஜித் எப்பவுமே அல்டிமேட் தான் என ரசிகர்கள் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர். பெண்களை மதிக்கும் அஜித்தின் இந்த குணத்தை புகழ்ந்து பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். படம் வரலைன்னா என்ன அஜித் பற்றிய ஒவ்வொரு விஷயமும் எங்களுக்கு புது பட ரிலீஸ் போல தான் என அஜித் ரசிகர்கள் குஷியாக கொண்டாடி வருகின்றனர்.