Ajith - ஜோசியம் பார்த்ததால்தான் அஜித்தின் அந்தப் படம் மெகா ஹிட்டானதா?
சென்னை: Ajith (அஜித்) அஜித் ஜோசியம் பார்ப்பதில் கெட்டிக்காரர் என்றும் அதனால்தான் மங்காத்தா மெகா ஹிட்டானது எனவும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். வங்கிக்கொள்ளையையும், வங்கிகள் மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் துணிவு வசூலித்திருப்பதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் ரியல் பொங்கல் வின்னர் துணிவுதான் எனவும் ரசிகர்கள் கூறினர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே 62: துணிவு படத்தில் நடித்தபோதே தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த சூழலில் அவர் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மகிழ் திருமேனி இப்போது கமிட்டாகியிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கவிருக்கிறார். அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்துக்கு வந்த சோதனை காலம்: அஜித் இப்போது வரிசையாக ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அவர் அளவு தோல்வி படங்களையும் கொடுத்ததில்லை. குறிப்பாக 2000த்தின் மத்தியில் அவர் அதிகளவிலான ப்ளாப் படங்களையே கொடுத்தார். அவருக்கு முதலில் பில்லா படம் கம்பேக்காக அமைந்தது. ஆனால் அதற்கு அடுத்து அவர் நடித்த ஏகன், அசல் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதனால் அஜித்திற்கு கட்டாயம் ஒரு ஹிட் தேவை என்ற நிலையே அப்போது நிலவியது.
அஜித்துக்கு கம்பேக் கொடுத்த மங்காத்தா: அப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த 2011ஆம் ஆண்டு மங்காத்தா படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கிய அந்தப் படம் அஜித்துக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை ஜாலியான படங்களை இயக்கிய வெங்கட்பிரபு அஜித்தை வைத்து ஒரு ஹிட்டை கொடுத்துவிடுவாரா என்ற கேள்வியே அனைவரிடமும் எழுந்தது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் மங்காத்தா படம் மெகா ஹிட்டானது.

பயங்கரமாக ஒர்க் அவுட் ஆன ஸ்க்ரீன் பிளே & ட்விஸ்ட்: படத்தில் அஜித்துடன் அர்ஜுன், த்ரிஷா, பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் ஸ்க்ரீன் பிளே ஒரு பக்கம் ரசிகர்களை கவர மறுபக்கம் க்ளைமேக்ஸ் ட்விட்ஸ்ட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இதனையடுத்து மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை தொடங்கப்படவில்லை.
மங்காத்தா மெகா ஹிட்டுக்கு இதுதான் காரணமா?: இந்நிலையில் மங்காத்தா படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அஜித்குமார் தீவிர ஆன்மீகவாதி என்பது அனைவருமே அறிந்தது. அவர் மங்காத்தா படத்தின்போது ஜோசியம் பார்த்துவிட்டுத்தான் அந்தப் படத்தில் நடிப்பதற்கு கமிட்டானாராம். அதனையடுத்து படமும் மெகா ஹிட்டானது. எனவே அஜித்குமார் ஜோசியம் பார்த்ததால்தான் அந்தப் படம் வசூலை குவித்து மெகா ஹிட்டானது என ஒரு தரப்பினர் கூற;
அஜித்தின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் படத்தின் வெற்றிக்கு காரணம். இதில் எங்கிருந்து ஜோசியம் வந்தது என மறுதரப்பினர் கூறிவருகின்றனர். எது எப்படியோ மங்காத்தா போல் இன்னொரு மெகா ஹிட் அஜித்துக்கு வேண்டும் என்பது மட்டும் உண்மை.


Click it and Unblock the Notifications











