twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளாவில் அஜித் படங்களின் வசூல் இவ்வளவுதானா..?

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழகத்தைப் பொறுத்தவரை, நடிகர் அஜித்தின் மாஸ் எப்படி என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. ஆனால், கேரளாவில் அவரது படங்களின் வசூல் இதுவரை ரூபாய் 10 கோடியைத் தொட்டது இல்லையாம்.

    அஜித் கார் ரேஸிஸ் தீவிர கவனம் செலுத்திவந்த காலத்தில் சினிமாவை விட்டு விலகியிருந்தார். அந்த நேரத்தில்தான் கேரளாவில், தமிழ் சினிமாவிற்கு என ஒரு மிகப்பெரிய மார்க்கெட் உருவானது.

    இதைப் புரிந்துக்கொண்ட விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் அந்த சமயங்களில் நல்ல படங்களில் நடித்ததால் கேரளாவிலும் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தனர்.

     குறி வைக்கும் அஜீத்

    குறி வைக்கும் அஜீத்

    அஜித் இப்போதுதான் வெளிமாநில மார்க்கெட்டை நோக்கியும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். இப்போது விஜய்யின் மார்க்கெட் கேரளாவில் வேற லெவலில் உள்ளது. ஆனால், சமீபகாலமாக மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என அஜித் படங்கள் தொடர்ந்து கேரளாவில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

     விவேகம் நல்ல பிசினஸ்

    விவேகம் நல்ல பிசினஸ்

    அதன் காரணமாகவே அஜித் நடித்து வருகிற 24-ம் தேதி வெளியாகவிருக்கும் 'விவேகம்' படத்தை ரூபாய் 4.5 கோடி கொடுத்து கேரளாவில் வாங்கியுள்ளனர். அஜித்தின் திரைப்பயணத்தில், கேரளாவில் அதிகம் வசூல் செய்த படம் 'ஆரம்பம்' தான். இப்படம் அங்கு ரூபாய் 6 கோடி வரை வசூல் செய்துள்ளது.

     கல்லா கட்டுவதில் விஜய் நம்பர் 1

    கல்லா கட்டுவதில் விஜய் நம்பர் 1

    விஜய் கேரளாவில் இதுவரை 4 படங்களுக்கு மேல் ரூபாய் 10 கோடி வசூலைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள நடிகர் மோகன்லாலுடன் அவர் சேர்ந்து நடித்ததால் 'ஜில்லா' படத்திற்கு கேரளாவில் பயங்கர வரவேற்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

     10 கோடி கிளப்பில் இணையுமா விவேகம்

    10 கோடி கிளப்பில் இணையுமா விவேகம்

    அடுத்த வாரம் வெளியாகும் 'விவேகம்' திரைப்படம் கேரளாவில் 300 திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 'விவேகம்' ரூபாய் 10 கோடி க்ளப்பில் இணைவதற்காக வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

    English summary
    Ajith's market is bit low in kerala. But hopes on Vivegam are high, the movie is releasing in nearly 300 theatres in kerala.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X