விஷால் படத்தால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு வந்த திடீர் சிக்கல்... 'தல' தலையிடுவாரா?

விஷாலின் மதகஜராஜா படத்தால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Nerkonda Paarvai Strike : மீண்டும் சிக்கலை சந்தீக்கும் நேர்கொண்ட பார்வை- வீடியோ

சென்னை: விஷாலின் மதகஜராஜா படத்தால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாராகியுள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தை, ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இந்தியில் அமிதாப் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் தமிழில் நடித்துள்ளார்.

இப்படம் அடுத்தமாதம் 8ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அஜித்துடன் வித்யாபாலன், ஷரத்தா நாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரிலீஸ் தேதி

ரிலீஸ் தேதி

இன்னும் ரிலீசுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், வியாபார ரீதியாக நிறைய பிரச்சினைகளை சந்தித்த வருகிறது நேர்கொண்ட பார்வை. முதலில் ஆகஸ்ட் 10ம் தேதி தான் படத்தை வெளியிடுவோம் என போனி கபூர் அறிவித்தார். ஆனால் அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் விநியோகஸ்தர்கள் ரிலீஸ் தேதியை மாற்ற வலியுறுத்தினர்.

ஆகஸ்ட் 8ம் தேதி

ஆகஸ்ட் 8ம் தேதி

இதையடுத்து ஆகஸ்ட் 8ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் படத்தின் வியாபாரத்தில் தொடர்ந்து சிக்கல் நீடித்ததாகவே தகவல்கள் வெளியாகின. தயாரிப்பாளர் கேட்ட தொகையை விநியோகஸ்தர்கள் கொடுக்க முன்வரவில்லை.

 மதகஜராஜா தயாரிப்பு நிறுவனம்

மதகஜராஜா தயாரிப்பு நிறுவனம்

இதையடுத்து படத்தை மொத்தமாக வியாபாரம் செய்யாமல், ஏரியா வாரியாக போனி கபூர் பிரித்து கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் மதகஜராஜா படத்தை தயாரித்த ஜெமினி நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து படத்தை வாங்கியிருப்பதாக தெரிகிறது.

ரிலீசில் பிரச்சினை

ரிலீசில் பிரச்சினை

இதுதான் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீசில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அக்ஷய் கிரோன் என்பவர் ஒரு பதிவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், "கடன் பிரச்சினை காரணமாக ஜெமினி பிலிம் சர்க்யூட் தங்களுடைய சொந்த தயாரிப்பான மதகஜராஜா படத்தையே வெளியிட முடியவில்லை. இந்நிலையில் அவர்கள் நேர்கொண்ட பார்வை படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளனர். இதனால் அவர்கள் பழைய கடனை அடைத்தால் மட்டுமே இந்த படத்தை வெளியிட முடியும்", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முடங்கிய மதகஜராஜா

முடங்கிய மதகஜராஜா

விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கிய படம் தான் மதகஜராஜா. இந்த படம் பல ஆண்டுகளாக முடங்கி கிடப்பது அனைவரும் அறிந்த கதைதான். எனவே நேர்கொண்ட பார்வை படமும் ரிலீசாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவே கோலிவுட்டிலும் பேசப்படுகிறது.

அஜித் தலையிடுவாரா?

அஜித் தலையிடுவாரா?

பொதுவாக அஜித்தை பொறுத்தவரை அவர் படத்தில் நடித்த பிறகு, அதன் வியாபாரத்தில் தலையிடுவதில்லை. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் தலையிட மாட்டார். எனவே நேர்கொண்ட பார்வை பட பிரச்சினையில் அவர் தலையிட்டு தீர்வு காண்பாரா? என்பது கேள்விக்குறியே. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் நேர்கொண்ட பார்வை படம் ரிலீசில் இப்படி ஒரு சிக்கல் ஏற்படும் என்பதை யாரும் எதிர்பாக்கவில்லை. தயாரிப்பாளர் போனி கபூர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பார் என படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X