மகளால் இயக்குநர்களிடம் புது கன்டிஷன் போடும் அஜித்

By Siva

Recommended Video

Trisha Speech about Nerkonda parvai Movie | UNICEF

சென்னை: அஜித் தனது மகளுக்காக புதுப்படங்களில் நடிக்கும் போது நிபந்தனை ஒன்றை விதிக்கிறாராம்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தை பார்த்த பலரும் அப்பா, மகள் இடையேயான பாசத்தை பார்த்து அழுதுவிட்டனர்.

தியேட்டருக்கு குடும்பம், குடும்பமாக சென்று படம் பார்த்து ஃபீல் பண்ணியதை பலரும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்களுக்கு விஸ்வாசம் படம் மிகவும் பிடித்திருந்தது.

அஜித் மகள்

அஜித் மகள்

விஸ்வாசம் படத்தில் வந்த அஜித்தின் கதாபாத்திரத்தை பார்த்து அவரின் மகள் அனோஷ்கா இம்பிரஸ் ஆகிவிட்டாராம். அப்பா, உங்கள் கேரக்டர் அருமை என்று கூறி பாராட்டியுள்ளார். இதையடுத்து பெண்களை கேலி, கிண்டல் செய்வது போன்ற காட்சிகள் என் படத்தில் இருக்கவே கூடாது என்று இயக்குநர்களிடம் கூறுகிறாராம் அஜித்.

அஜித்

அஜித்

அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான நேர்கொண்ட பார்வை படமும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படத்தை பார்த்த அனைவரும் அஜித் கதாபாத்திரத்தை பாராட்டினார்கள். அனைத்து ஹீரோக்களும் தங்களின் கெரியரில் ஒருமுறையாவது நேர்கொண்ட பார்வை போன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் கூட தெரிவித்திருந்தார்.

காட்சிகள்

காட்சிகள்

நேர்கொண்ட பார்வை படத்தால் பெண்கள் மத்தியில் தனக்கு நல்ல பெயர் ஏற்பட்டிருப்பதை அஜித் உணர்ந்துள்ளார். அதனால் பெண்களை கேலி செய்யும் காட்சிகள் தன் படத்தில் இருக்கவே கூடாது என்று இயக்குநர்களிடம் கூறுகிறாராம் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் தல 60 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. வினோத் படத்திற்காக அஜித் ஷேவ் செய்து, தலைக்கு டை அடித்து பழைய தல போன்று இருப்பது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

புதுப்படம்

புதுப்படம்

அஜித் நிபந்தனை விதிப்பதை பார்த்தால் பெண்களை கேலி, கிண்டல் செய்வதற்கு பெயர் போன அந்த இயக்குநரின் படத்தில் நடிக்க மாட்டார் போன்று. அந்த இயக்குநர் படத்தில் ஹீரோவும், காமெடியனும் சேர்ந்து பெண்களை கிண்டல் செய்வது தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பலரும் எதிர்த்தும் அந்த இயக்குநர் திருந்தவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X