அஜீத் 56 - கேவி ஆனந்த், அஜீத் 57 - விஷ்ணுவர்தன், அஜீத் 58 - சிவா... 'தல'யோட லைன் அப் இது!!

By Shankar

சென்னை: கவுதம் மேனன் படத்துக்குப் பிறகு அஜீத் அடுத்தடுத்து நடிக்கும் மூன்று படங்களின் இயக்குநர்கள் யார் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார்.

இந்த மூன்று படங்களும், அஜீத்தின் கால் ஆபரேஷனுக்குப் பிறகு அடுத்தடுத்து தொடங்கவிருக்கின்றன.

அஜீத் இப்போது ஏஎம் ரத்னத்துக்காக கவுதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் மத்தியில் தொடங்குகிறது.

அடுத்து...

அடுத்து...

இந்தப் படத்துக்குப் பிறகு அஜீத் நீண்ட நாட்களாக ஒத்திப் போட்டு வந்த தன் கால் அறுவைச் சிகிச்சையைச் செய்து கொள்கிறார். இதற்கடுத்த மூன்று மாதங்கள் ஓய்வெடுக்கிறார்.

முழுவீச்சில்...

முழுவீச்சில்...

அதன் பிறகு தொடர்ந்து முழுவீச்சில் படங்களில் கவனம் செலுத்துகிறார் அஜீத். அதற்கு முன்னோட்டமாக அடுத்தடுத்த தன் மூன்று படங்களுக்கான இயக்குநர்களை இப்போதே முடிவு செய்துவிட்டாராம் அஜீத்.

கே வி ஆனந்த்

கே வி ஆனந்த்

கவுதம் மேனன் படம் முடிந்ததும் அடுத்து கேவி ஆனந்த் இயக்கும் புதுப் படத்தில் நடிக்கிறாராம் அஜீத். இந்தக் கதை ரஜினிக்காக கே வி ஆனந்த் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. இது அஜீத்தின் 56வது படம்.

வெங்கட் பிரபு அல்லது விஷ்ணுவர்தன்

வெங்கட் பிரபு அல்லது விஷ்ணுவர்தன்

அந்தப் படம் முடிந்ததும் வெங்கட் பிரபு அல்லது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். சூர்யா படம் முடிந்து வெங்கட் பிரபு தயாராக இருந்தால் அவருக்குதான் முதலுரிமை.. அவர் தயாராக இல்லாவிட்டால் அந்தப் படம் விஷ்ணுவர்தனுக்கு என முடிவு செய்துள்ளார். இது அஜீத்துக்கு 57வது படம்.

சிவா

சிவா

அஜீத்தின் 58வது படத்தை இயக்குபவர் சிவா. வீரம் பட இயக்குநர். தீவிர அஜீத் ரசிகர். அநேகமாக இந்தப் படத்தை ஏ எம் ரத்னமே தயாரிப்பார் என்கிறார்கள். இந்தப் படத்துக்குதான் ரூ 50 கோடியை அஜீத்துக்கு சம்பளமாகத் தரவிருப்பதாக ரத்னம் கூறியிருப்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X