Ajith - அவர் உருவம் பாரு எளிமை...ரோட்டுக்கு வந்த அஜித்குமார் - வைரலாகும் புகைப்படம்

சென்னை: Ajith (அஜித்) உலக சுற்றுப்பயணத்தில் இருக்கும் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

அஜித்குமார் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்தது. போட்டியாக களமிறங்கிய வாரிசு படத்தைவிட துணிவு படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் அஜித் உற்சாகத்தின் உச்சத்தில் இருப்பதாகவும், அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.

Ajiths New Photo Gone Trend On Social Media

ஏகே 62: துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித்குமார். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் அந்தப் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதையில் இரண்டாம் பாதி லைகா நிறுவனத்துக்கு பிடிக்காததால் அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் வெளியேறியதுதான் சில மாதங்கள் சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்தது.

மகிழ் திருமேனி இன்: விக்னேஷ் சிவன் வெளியேறியதை அடுத்து அஜித் 62ஆவது படத்தை இயக்க மகிழ் திருமேனி கமிட்டாகியிருக்கிறார். கதையை தயார் செய்யும் பணியில் மும்முரமாக இறங்கியிருந்த அவர் தற்போது கதையை இறுதி செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அஜித்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.அதன்படி படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் வேர்ல்ட் டூர்: இதற்கிடையே பரஸ்பர மரியாதை பயணம் என்ற பெயரில் நடிகர் அஜித்குமார் பைக்கில் வேர்ல்ட் டூருக்கு திட்டமிருந்தார்.ஏகே 62 படத்தை முடித்துவிட்டு செல்லலாம் என முடிவெடுத்திருந்த அவர் படம் தொடங்க தாமதம் ஆனதால் முதல்கட்ட பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவர் இப்போது திபெத், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் தனது சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அதுதொடர்பான வீடியோ சில நாள்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

Ajiths New Photo Gone Trend On Social Media

வைரலாகும் புகைப்படம்: இந்நிலையில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருக்கும் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு சாலையோரத்தில் படுத்து உறங்குகிறார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள், அஜித்குமாரின் பிறந்தநாளை தமிழ்நாடே கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர் எவ்வளவு எளிமையாக தனது பாதையில் சென்றுகொண்டிருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

ஆவண படமாகிறதா?: முன்னதாக, அஜித் செய்யும் உலக சுற்றுப்பயணத்தை ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வீடியோவாக பதிவு செய்யவிருக்கிறார் என்ற புதிய தகவல் பரவியிருக்கிறது. அதுமட்டுமின்றி அது ஆவண படமாக மாற்றும் நடவடிக்கையும் விரைவில் தொடங்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்காக அஜித் செய்யும் சுற்றுப்பயணத்தில் நீரவ் ஷாவும் பங்கேற்கலாம் எனவும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X