வலிமை படத்தில் அஜித் -ஹுமா குரோஷியின் புதிய புகைப்படம்... வைரலாக்கிவரும் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் அஜித், ஹீமா குரோஷி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை.
எச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளது.
படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அடுத்தடுத்து போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வலிமை படம்
நடிகர் அஜித், ஹீமா குரோஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து பொங்கலையொட்டி வெளியாக உள்ள படம் வலிமை. இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு அஜித் இந்தப் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக எச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் இணைந்த கூட்டணி
இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அஜித் -வினோத் -போனிகபூர் வலிமை படத்தில் இணைந்துள்ளனர். இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னாக சிவா இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் அஜித் நடித்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
வலிமை படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் பாடல்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி சமூக வலைதளங்களில் மிகுந்த பரபரப்பிற்கு உள்ளானது. குறிப்பாக டீசர் மிகுந்த வரவேற்பை பெற்றது.

சிறப்பான லுக்கில் அஜித்
மேலும் படத்தின் போஸ்டர்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைலானது. மேலும் படத்தில் சிறப்பான லுக்கில் அஜித் காணப்படுகிறார். அவரது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலிருந்து மாறுபட்டு இந்தப் படத்தில் காணப்படுகிறார்.
Recommended Video

புதிய புகைப்படம்
இந்நிலையில் தற்போது படத்தின் நாயகி ஹுமா குரோஷியுடன் இணைந்து அஜித் காணப்படும் புதிய புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதில் மிகவும் ஸ்மார்ட்டான அஜித்தை பார்க்க முடிகிறது. இந்தப் புகைப்படத்தையும் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











