Don't Miss!
- News
அதிகாலையில் நடந்த துயரம்..போர் விமானங்கள் விபத்து எப்படி நடந்தது? நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன?
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடும் அஜித்தின் ஏகே62.. சூட்டிங் எப்பன்னு பாக்கலாங்களா?
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது துணிவு படம்.
இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில், வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து படம் ரிலீசாக உள்ளது.
படத்தின் ட்ரெயிலர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றன. படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்.
முதலில் ரஜினிகாந்த்… இப்போ அஜித்குமார்… அடுத்தடுத்து மெகா ஸ்டார்களை வளைத்துப் போடும் லைகா!

நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித் நடிப்பில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள படம் துணிவு. இந்தப்படம் தீபாவளி ரிலீசாக இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெயிலர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் மரண மாஸாக வெய்ட்டிங்கில் உள்ளனர்.

3வது முறையாக கூட்டணி
படத்தை மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்து ஹெச் வினோத் இயக்கி உள்ளார்.. முன்னதாக அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை அவர் இயக்கி இருந்தார். இந்தப் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த மூவர் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளியாக உள்ளது துணிவு.

பட்டையை கிளப்பும் ட்ரெயிலர்
படத்தின் ட்ரெயிலர் சமீப இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றுள்ளது. முன்னதாக வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்தின் சாதனையை தற்போது அஜித்தின் துணிவு படம் முறியடித்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களின் அதிகமான வீயூஸ்களை பெற்று வருகிறது. இதையடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அஜித்தின் ஏகே62 படம்
இதனிடையே தற்போது அஜித் தனது அடுத்த படமான ஏகே 62 படத்திற்காக முழு வீச்சில் தயாராகி வருகிறார். இந்தப் படத்தை நயன்தாராவின் கணவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். படம் குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் வரும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் ஏகே62
இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட் உள்ளிட்டவற்றை முன்னதாகவே விக்னேஷ் சிவன் தயாரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே இன்னும் சில தினங்களில் துவங்கும் இந்த படத்தின் ஷூட்டிங்கை மும்முரமாக முழு வீச்சில் நடத்தி முடிக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளாராம். படத்தை தீபாவளி பண்டிகையில் திரையிட அவர் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆக்ஷன் த்ரில்லர் படம்
இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள அஜித்தின் துணிவு படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகள் அமைந்துள்ளது படத்தின் ட்ரெயிலரில் தெரிகிறது. முன்னதாக வெளியான அஜித்தின் வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது வெளியாகவுள்ள துணிவு படம் அவருக்கு சிறப்பாக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.