தல போல வருமா.. வைரலாகும் அஜித்தின் புதிய போட்டோ.. ஆனா, ரசிகாஸ் நாம தப்புக் கணக்கு போட்டுட்டோமோ?
ஹோட்டல் ஊழியர்களுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை: சுற்றுலா சென்ற இடத்தில் ஓட்டல் ஊழியர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ஓய்வில் இருக்கிறார் அஜித். விரைவில் அவர் எச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என தனது சமீபகால படங்களில் வெள்ளை தாடியுடன் வலம் வந்தார் அஜித். ஆனால் அடுத்து நடிக்க உள்ள படத்தில் அவர், போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்காக அவர் உடல் எடையை குறைத்து, தனது ஹேர்ஸ்டைலையும் மாற்றி இருக்கிறார்.
இதுதொடர்பாக சமீபத்தில் வெளியான புகைப்படங்களில் அவர் மிகவும் இளமையான தோற்றத்தில் காணப்பட்டார். இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், அவர் ஓய்வுக்காக தங்கியிருந்த ஓட்டல் ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
எப்போதும் ரசிகர்களின் உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்பவர் அஜித். அந்த வகையில் ஹோட்டல் ஊழியர்கள் அனைவருடனும் சேர்ந்து இந்த குரூப் போட்டோவிற்கு அவர் போஸ் கொடுத்துள்ளார்.
இந்த போட்டோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த போட்டோவில் அஜித் லேசான தாடியுடன் காணப்படுகிறார். இதனால் தனது அடுத்தப் படத்திலும் அஜித், தாடியுடன் தான் நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











