விசுவாசம் படத்தில் மீண்டும் 'அஜித் மகள்'!
என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா விசுவாசம் படத்தில் மீண்டும் அவரது மகளாக நடிக்கிறார்.
சென்னை: என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா விசுவாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி நடைபோட்ட திரைப்படம் என்னை அறிந்தால். இப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தவர் பேபி அனிகா. படம் முழுவதும் அஜித்துடனே வரும்படியான மகள் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
அஜித்தும் அனிகாவும் சேர்ந்து பாடும் உனக்கென்ன வேண்டும் சொல்லு பாடல் அப்படத்தில் பெரிய ஹிட்டானது. என்னை அறிந்தால் படத்தில் அனிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அஜித்தின் மகள்
இந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நான்காவது திரைப்படமான விசுவாசத்திலும், அனிகா நடிப்பது தெரியவந்துள்ளது. இப்படத்திலும் அவர் அஜித்தின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது.

யாருக்கு மகள்
விசுவாசம் படத்தில் அஜித் அப்பா மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். எனவே அப்பா அஜித்துக்கு மகளாகிறாரா, இல்லை மகன் அஜித்துக்கு மகளாகிறாரா என்பது தெரியவில்லை.

டாக்டர் வேடம்
இப்படத்தில் மகன் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டாக்டர் வேடத்தில் நடிக்கிறார். தந்தை அஜித்தின் ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை பட தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. அவருக்கு ஜோடியை தேடும் படலம் நடந்துகொண்டிருக்கிறது.

ஆந்திராவில் படப்பிடிப்பு
விசுவாசம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே ஐதராபாத்தில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நடக்கிறது. மும்மை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் சிவா திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











