எல்லாம் ஓ.கே.. அந்த கண்டிஷன் மட்டும் உதைக்குதே AK.. அதிர்ச்சியில் பதறும் தயாரிப்பாளர்கள்
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டுக்காக அவரது தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தவம் கிடந்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள். 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஏகே-வின் 64-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற விவாதம் தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக். இந்த ரேசில் அஜித்தின் அபிமான இயக்குநர்களான வெங்கட் பிரபு, சிறுத்தை சிவா, ஏ.எல். விஜய் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் என இந்த நான்கு பேரில் ஒருவர்தான் எப்படியும் அஜித்தை இயக்கப் போகிறார்கள் என்று கோலிவுட் வட்டாரங்கள் அடித்துச் சொல்கின்றன.
சினிமா அப்டேட்டுகள் ஒருபுறம் பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்க, நடிகர் அஜித்தோ தனது முழு கவனத்தையும் கார் ரேஸ் விளையாட்டுகளின் பக்கமே திருப்பியுள்ளார். சமீபத்தில் தனது தாயாரின் திடீர் மறைவு செய்தியைக் கேட்டு சோகத்துடன் சென்னைக்கு வந்த அஜித், இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு, அடுத்த நாளே தனது கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்பதற்கான அடுத்தகட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்காக அவசர அவசரமாக பிரான்ஸ் நாட்டுக்கு விமானம் ஏறிச் சென்றுவிட்டார். இதனால், அவரது அடுத்த படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தான் கவனித்து வருகிறார்.

இயக்குநர்கள் நால்வரும் ரெடியாக இருக்க, அஜித்தின் கால்ஷீட்டை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று தமிழ் சினிமாவின் டாப் தயாரிப்பாளர்கள் பலரையும் நேரில் சந்தித்து அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும், இந்த இயக்குநர்களும் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எப்படியோ போராடி பல கோடிகளை முதலீடு செய்யத் தயாராக இருக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களை அஜித்தின் படத்திற்குள் இழுத்து வந்துவிட்டாலும், அங்கே தான் ஒரு பெரிய இடியாப்பச் சிக்கல் முளைத்திருக்கிறது.
ஓட்டம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்: அஜித் தரப்பில் இருந்து போடப்படும் ஒரு அதிரடி கண்டிஷனைக் கேட்டு, ஆவலோடு வந்த தயாரிப்பாளர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு உடனடியாக பேக் அடித்து ஓடுகிறார்களாம். அதாவது, அஜித்திற்குப் பேசப்படும் பல கோடி ரூபாய் சம்பளத்தை இந்திய வங்கிக் கணக்கில் செலுத்தக் கூடாது என்றும், அந்த மொத்த தொகையையும் அவரது துபாய் நாட்டு வங்கிக் கணக்கில் (Dubai Account) தான் நேரடியாகச் செலுத்த வேண்டும் என்றும் கறாராகக் கூறப்படுகிறதாம்.

நடைமுறைச் சிக்கல்: இன்றைய காலகட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையை சர்வதேச விதிமுறைகளின்படி வெளிநாட்டு அக்கவுண்ட்டிற்கு மாற்றுவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் வரி விவகாரங்களை நினைத்து தயாரிப்பாளர்கள் மொத்தமாகப் பின்வாங்கி வருவதாகத் திரையுலகில் பலத்த பேச்சுக்கள் அடிபடுகிறது. அஜித்தின் இந்த ஒற்றைக் கண்டிஷன் தயாரிப்பு நிறுவனங்களை அதிர்ச்சியில் பதற வைத்துள்ளதால், அஜித்தின் அடுத்த படம் எப்போது தொடங்கும், அதற்குப் பணம் போடப் போகும் அந்தத் துணிச்சலான தயாரிப்பாளர் யார், படத்தை இயக்கப் போகும் அந்த இயக்குநர் யார் என்ற பல மில்லியன் டாலர் கேள்விகள் விடை தெரியாமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications