இப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை... அஜித்தின் ரீல் மகள்!
சென்னை : தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமாக உள்ள நடிகை அனிகா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
அஜித் உடன் இணைந்து என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த குழந்தை நட்சத்திரமாக ஆனார்.
தற்போது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் நடித்திருக்கும் அனிகா இந்த மாதிரிதான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டு கொண்டிருக்கும் இடத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் குழந்தை
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அனைவருக்கும் பிடித்த நபராக இருக்கும் அனிகா சுரேந்திரன் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் குழந்தையாக நடித்து பிரபலமானவர். மலையாளத்திலும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களில் நடித்துள்ள அவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.

பல சாதனைகளை
என்னை அறிந்தால் படத்தில் அஜித் மற்றும் அனிகாவின் கெமிஸ்ட்ரி உண்மையான அப்பா மகள் போலவே இருக்க பலரும் இவரை அஜித்தின் மகளாகவே பாவித்து வந்தனர் இந்த நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் இணைந்து நடித்து இந்த முறையும் எதிர்பார்த்தது போலவே தந்தை மகள் காம்பினேஷன் மிகச் சிறப்பாக ஒர்க்கவுட்டாகி இந்த படமும் அதிக நாட்கள் ஓடி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று பல சாதனைகளை புரிந்தது.

குட்டி நயன்தாரா
இப்பொழுது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் நடித்துவரும் அனிகா சுரேந்திரன் விரைவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடிக்க தயாராகி வருகிறார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பார்க்க நீங்க அப்படியே அச்சு அசல் நயன்தாராவைப் போலவே இருக்கிறீர்கள் என புகழ்ந்ததோடு இவரை "குட்டி நயன்தாரா" எனவும் அழைத்து வருகின்றனர் .

அருவியின் அருகில்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள் இருப்பது போல நடிகை அனிகாவும் தான் எப்படி இருக்க வேண்டும் என நினைத்திருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் சமிபத்தில் எடுத்த போட்டோ ஷூட் படங்கள் இருப்பதாக தற்பொழுது அதை பகிர்ந்துள்ளார். அதில் இயற்கை கொஞ்சும் அழகு அருவியின் அருகில் மஞ்சள் நிற ஆடையில் கையில் பூக்களுடன் பிரகாசமாக அந்த புகைப்படங்களில் அனிகா உள்ளார்.


Click it and Unblock the Notifications











