நிஜமாகவே அவர் தான் இவரா?: அஜித்தை பார்த்து வியந்த வித்யா பாலன்
Recommended Video
சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார் வித்யா பாலன்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் மூலம் பாலிவுட் நடிகை வித்யா பாலன் கோலிவுட் வந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் மனசெல்லாம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். படப்பிடிப்பு துவங்கிய பிறகு அவருக்கு நடிக்கத் தெரியவில்லை என்று கூறி நீக்கிவிட்டு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்தார்கள்.
பாலிவுட்டில் பெயர் எடுத்துவிட்டு மீண்டும் கோலிவுட் வந்துள்ள வித்யா நேர்கொண்ட பார்வை படம் குறித்து கூறியிருப்பதாவது,

ஸ்ரீதேவி
ஒரு தமிழ் படம் தயாரிக்கிறேன் என்று போனிஜி போன் செய்து கூறினார். அவர் ஒரு பக்க கதையுடன் வந்து என்னை சந்தித்தார். பிங்க் படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் சில மாற்றங்கள் செய்துள்ளதாக கூறினார். அந்த ஒரு பக்க கதையை படிக்கிறேன் என்று கூறிவிட்டு படிக்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டேன். எனக்கு ஸ்ரீதேவிஜி மற்றும் போனிஜி மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. அதனால் தான் படத்தில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்தேன். அதன் பிறகே அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதாக கூறினார்.

அஜித்
அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். நான் பலகாலமாக அஜித் குறித்து கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவருடன் சேர்ந்து நடித்தபோது ஏகப்பட்ட ரசிகர்கள் கொண்ட அந்த நபரா இவர் என்று ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவுக்கு அஜித் சிம்பிளாக இருந்தார். படங்கள், திரையுலக பயணம் குறித்து நானும், அஜித்தும் நிறைய பேசினோம். அவர் ரொம்ப ஃபிரெண்ட்லியானவர்.

கோலிவுட்
நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு அருமையான பாடல் உள்ளது. கணவன் மனைவி இடையேயான அன்பை வெளிப்படுத்தும் பாடல். இதற்கு மேல் படம் குறித்து நான் எதுவும் சொல்லக் கூடாது. இந்த படம் மூலம் என் கோலிவுட் பயணம் துவங்கியதில் மகிழ்ச்சி.

தமிழ்
நேர்கொண்ட பார்வை படத்தில் நானே டப்பிங் பேசியிருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் நான் அனைவருடனும் தமிழில் தான் பேசினேன். நான் பாலக்காடு தமிழ் பேசுவேன். மும்பையில் பிறந்து வளர்ந்ததாலும் என் தமிழ் சற்று வித்தியாசமாக இருக்கும். எங்கள் வீட்டில் தமிழில் தான் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார் வித்யா பாலன்.


Click it and Unblock the Notifications











