அப்டியே ஜெராக்ஸ் மாதிரி இருக்காங்களே.. வைரலாகும் தல மகன், மகள் செல்பி.. மறக்காம சுத்தி போடுங்க ஷாலு!

அஜித் குழந்தைகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

Ajith Advik rare Images: வைரலாகும் தல மகன், மகள் செல்பி

சென்னை: நடிகர் அஜித்தின் குழந்தைகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமர்க்களம் படத்தில் நடித்த போது அஜித்தும், ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அத்தம்பதிக்கு 2008ம் ஆண்டு அனோஷ்கா என்ற மகளும், 2014ம் ஆண்டு ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.

Ajiths son and daughter photo goes viral

நடிகர் அஜித்தே பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. எனவே தன் குழந்தைகளையும் ஊடக வெளிச்சம் படாமல் தான் வளர்த்து வருகிறார்.

ஆனாலும் விமான நிலையத்திற்கு வரும் போது, ஷாப்பிங் செல்லும் போது என மக்கள் கூடும் இடங்களுக்கு வரும் போது, குடும்பத்துடன் கேட்டாலும் அஜித் செல்பி தர மறுப்பதில்லை. இது அரிதாகவே நடப்பதால், அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானதுமே வைரலாகி விடுகிறது.

அந்தவகையில் தற்போது ஆத்விக்கும், அனோஷ்காவும் நாய்க்குட்டி ஒன்றோடு எடுத்துக் கொண்ட செல்பி ஒன்று வைரலாகியுள்ளது. தரையில் படுத்தபடி இருவரும் வாய் நிறைய சிரிப்போடு அந்தப் புகைப்படத்தில் காணப்படுகின்றனர்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அஜித் ரசிகர்கள், அனோஷ்காவை குட்டி ஷாலினி என்றும், ஆத்விக்கை குட்டி அஜித் என்றும் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் சொல்வது போல், அந்தப் புகைப்படத்தில் அக்குழந்தைகளும் அப்படித்தான் ஜெராக்ஸ் காப்பியாக இருக்கிறார்கள்.

#AadvikAjith, AnoushkaAjith என்ற ஹேஸ்டேகில் இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X