துபாய் எக்ஸ்போவில் திரையிடப்பட்ட அஜித்தின் சூப்பர் ஹிட் படம்...துள்ளி குதிக்கும் ரசிகர்கள்

துபாய் : அஜித் பற்றி அடுத்த தகவல்களால் அவரின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வரும் நிலையில், துபாய் எக்ஸ்போவிலும் அஜித்தின் சூப்பர் ஹிட் படம் திரையிடப்பட்டுள்ளது ரசிகர்களின் மகிழ்ச்சியை எல்லை மீற வைத்துள்ளது.

அஜித்தின் புதிய படங்கள் மட்டுமல்ல, அஜித் பற்றி என்ன தகவல் வெளி வந்தாலும் அதை கொண்டாடி வருகின்றனர். உடனடியாக அந்த தகவல் தொடர்பாக ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் ஆக்கி விடுகின்றனர். சாதாரண தகவலுக்கே அப்படி என்றால், சர்வதேச கவனம் ஈர்க்கும் தகவல் என்றால் சும்மாவா இருப்பார்கள்.

அஜித்தின் சூப்பர் ஹிட் படம்

அஜித்தின் சூப்பர் ஹிட் படம்

அஜித்தின் சமீபத்திய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று விஸ்வாசம். 2019 ம் ஆண்டு ரிலீசான இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். நயன்தாரா ஹீரோயினாக நடித்த இந்த படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தேசிய விருது பெற்ற பாடல்

தேசிய விருது பெற்ற பாடல்

இந்த படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த பாடலுக்கு இசையமைத்ததற்காக டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. தம்பி ராமைய்யா, விவேக், யோகிபாபு, கோவை சரளா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

ரீமேக் ஆகும் விஸ்வாசம்

ரீமேக் ஆகும் விஸ்வாசம்

மனைவி மற்றும் மகளை பிரிந்த கணவர், பல போராட்டங்களை கடந்து எப்படி அவர்களுடன் மீண்டும் இணைகிறார் என்பது தான் படத்தின் கதை. பிரம்மாண்ட வெற்றி பெற்ற இந்த படத்தை பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது.

துபாயில் விஸ்வாசம்

துபாயில் விஸ்வாசம்

இந்நிலையில் துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 யில் இந்தியா சார்பில் விஸ்வாசம் படம் மார்ச் 24 ம் தேதி திரையிடப்பட்டது. இந்தியா சார்பில் திரையிடப்படும் படங்களின் பட்டியலில் விஸ்வாசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X