மீண்டும் வெங்கட் பிரபுவுக்கு கால்ஷீட் தருகிறார் அஜீத்!
மீண்டும் தன்னை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குத் தருகிறார் அஜீத்.
பில்லாவுக்குப் பிறகு அஜீத்துக்கு சொல்லிக் கொள்ளும்படியான படம் என்றால் அது மங்காத்தாதான். அந்தப் படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு.
அஜீத் இப்போது நரைத்த தலை, தாடியுடன் தைரியமாக படங்களில் நடிக்கக் காரணம் வெங்கட் பிரபு அந்த தோற்றத்தை சுவாரஸ்யமாக மாற்றியதுதான்.

அந்த வெங்கட் பிரபுவின் பிறந்த நாளன்று, தன் பங்களாவுக்கு அழைத்து சமீபத்தில் விருந்து கொடுத்த அஜீத், கவுதம் மேனன் படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் படத்தை நீங்கள் இயக்கப் போகிறீர்கள். நல்ல கதை தயார் செய்யுங்கள் என வெங்கட் பிரபுவிடம் கூறினாராம்.
அதுமட்டுமல்ல, பிரியாணி படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் சின்ன பட்ஜெட் படம் ஒன்றில் கவுரவ வேடத்தில் நடித்துத் தரப் போவதாகவும் அஜீத் கூறியுள்ளாராம்.
அடுத்தடுத்து அஜீத் தந்த இந்த இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கும் வெங்கட் பிரபு, பிரியாணியை மறந்துவிட்டு, மற்ற இரு படங்களின் வேலைகளை மளமளவெனத் தொடங்கிவிட்டாராம்!


Click it and Unblock the Notifications











