திடீர் திடீர்ன்னு லீவ் எடுக்கிறார்.. வலிமை ஷூட்டிங்கிற்கு சரியாக வராத அஜித்.. படக்குழு ஷாக்.. ஏன்?

நடிகர் அஜித், வலிமை படத்தின் ஷூட்டிங்கிற்கு சரியாக வரவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

Recommended Video

வலிமை ஷூட்டிங்கிற்கு சரியாக வராத அஜித்.. படக்குழு ஷாக்.. ஏன்?

சென்னை: நடிகர் அஜித், வலிமை படத்தின் ஷூட்டிங்கிற்கு சரியாக வரவில்லை என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் பெரிய வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடிக்கிறார். இந்த படத்திற்காக நடிகர் அஜித் உடம்பை குறைத்து வருகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் அஜித் கடந்த சில நாட்களாக சரியாக வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவில்லை என்று புகார் வந்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து வந்த வலிமை ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. சென்னையில் நடந்த இந்த ஷூட்டிங்கில் நடிகர் அஜித்திற்கு காயம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் அஜித் சிறிய முதலுதவி சிகிச்சையுடன் தனது ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை பிசி

சென்னை பிசி

சென்னையில் ஷூட்டிங் நடந்த போது பலமுறை அதற்கு சரியாக அஜித் வரவில்லை என்கிறார்கள். கால் சீட் கொடுத்து இருந்தும் கூட அஜித் சரியாக வரவில்லை. முக்கியமான நாட்களாக அவரால் ஷூட்டிங் நடக்கமால் போனது என்றும் கூறுகிறார்கள். இது தொடர்பாக இயக்குனர் வினோத் படாஅதின் தயாரிப்பு குழுவிடம் புலம்பி இருக்கிறார் என்றும் தகவல்கள் வருகிறது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அஜித் இப்போது சினிமா தவிர்த்து யுஏவி விமானங்களை பறக்க விடுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அதேபோல் ஹெலிகாப்டர் ஓட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் அஜித் அதிக அளவு நேரத்தை செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பலமுறை அவர் திடீர் திடீர் என்று வெளிநாட்டிற்கும் கிளப்பி சென்று விடுகிறார். இதனால் அவரால் சென்னையில் ஷூட்டிங்கில் சரியாக கலந்து கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.

அடுத்து எங்கே

அடுத்து எங்கே

இந்த படத்தின் அடுக்கட்ட ஷூட்டிங் வரும் மார்ச்சில் இருந்து ஆந்திராவில் நடக்க உள்ளது. ஹைதராபாத் சினிமா தளம் ஒன்றில் இதன் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஷூட்டிங்கிற்காவது அஜித் சரியாக வருவாரா, அல்லது வெளிநாடு செல்வாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. படக்குழு இதனால் கடும் குழப்பத்தில் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் மறுப்பு

ஆனால் மறுப்பு

அதே சமயம் எச். வினோத்திற்கு நெருக்கமான சிலர், படத்தின் ஷூட்டிங்கில் பிரச்சனை இல்லை. அஜித் சரியாக கால் சீட் படி நடித்துக் கொடுக்கிறார். அவர் உடலில் காயம் ஏற்பட்ட போது கூட ஷூட்டிங் பாதிக்கவில்லை. உடனே வேகமாக நடிக்க வந்தார். அவர் மீது வைக்கப்படும் புகார்கள் உண்மை இல்லை. சிலர் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X