விநாயகர் சதுர்த்தி தினத்தில் தல 55 பட தலைப்பு வெளியீடு?

By Mayura Akilan

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் தலைப்பு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதுவரை இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை. தல 55 என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

அஜீத் – கவுதம் மேனன்

அஜீத் – கவுதம் மேனன்

அஜீத் - கவுதம் மேனன் கூட்டணி அமைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 75 சதகிவித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

அனுஷ்கா - த்ரிஷா

அனுஷ்கா - த்ரிஷா

அஜீத்துடன் அனுஷ்கா, த்ரிஷா, அருண்குமார், விவேக் முதலானோர் நடிக்க, இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

கவுதம் மேனன், அஜீத் முதன் முதலாக இணைந்துள்ள படம் இது. அது மட்டுமல்ல, அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் என்பதாலும் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில்

தல 55 படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் வேலைகளையும் விரைவில் துவங்கவிருக்கிறார்களாம்.

பர்ஸ்ட் லுக் வெளியீடூ

பர்ஸ்ட் லுக் வெளியீடூ

இன்னும் படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக டைட்டில் வைக்கவில்லை. எனவே விநாயக சதுர்த்தி அன்று (29-8-14) இப்படத்தின் தலைப்பை அறிவிக்க இருக்கிறார்கள். அன்றே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X