போஸ்டர்ஸ் மட்டும் தான் வருது… சில்லா சில்லா ரிலீஸ் எப்போ?: அஜித் ரசிகர்களுக்கு அப்டேட் ரெடி
சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹெச் வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
இந்நிலையில், துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'சில்லா சில்லா' குறித்து அனிருத் ஒரு முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.

துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள்
அஜித் நடித்துள்ள துணிவு பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படம், ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளது. துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதால், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு பிஸியாக உள்ளது. இந்நிலையில், துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'சில்லா சில்லா' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சில்லா சில்லா போஸ்டர்
ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள துணிவு முதல் பாடலை அனிருத் பாடியுள்ளது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. மேலும், 'சில்லா சில்லா' என்ற துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் அஜித்தின் இன்ட்ரோ சாங்காக இருக்கும் என சொல்லப்படுகிறது. சில தினங்களுக்கு முன்னர் சில்லா சில்லா பாடலின் ஃபேன் மேட் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், தற்போது படக்குழுவும் சில்லா சில்லா பாடலுக்கான போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அதில், ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

ஜிப்ரான் ட்வீட்
துணிவு படத்தின் சில்லா சில்லா போஸ்டர் வைரலாகி வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜிப்ரானும் தனது டிவிட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். இயக்குநர் ஹெச் வினோத்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள ஜிப்ரான், "இயக்குநருடன் துணிவு படத்தின் இசை குறித்த மீட்டிங் முடிந்த பிறந்து எனது புன்னகை" என ஸ்வீட்டாக அப்டேட் கொடுத்துள்ளார். ஜிப்ரானின் டிவிட்டர் பதிவை பார்க்கும் போது, துணிவு படத்தின் பின்னணி இசைக்கான வேலைகள் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், சில்லா சில்லா பாடலின் ரிலீஸ் தேதி பற்றி இருவரும் டிஸ்கஷன் செய்தார்களா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அனிருத் குரலில் சில்லா சில்லா
துணிவு படத்தின் சில்லா சில்லா பாடலை அனிருத் பாடியுள்ளதால், இது செம்ம மாஸ்ஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் பாடல் பற்றி பேசியுள்ள அனிருத்தும், "எனது கேரியரில் ஹிட் லிஸ்ட்டில் ஒன்றாக சில்லா சில்லா பாடல் இருக்கும். இந்தப் பாடலை கேட்டால் அஜித் ரசிகர்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும்" என்றுள்ளார். அனிருத்தின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை இப்போதே பைத்தியம் பிடிக்க வைத்துவிட்டது. மேலும், எந்த நேரம் வேண்டுமானாலும் துணிவு படத்தில் இருந்து சில்லா சில்லா பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











