ஃபர்ஸ்ட் குத்து சாங்… நெக்ஸ்ட் அஜித்தோட கெத்து சாங்: துணிவு ப்ளே லிஸ்ட்ல இப்படியொரு ட்விஸ்ட்டா?

சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அஜித்துடன் மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ளார்.

துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்தப் படத்தின் பாடல்கள் குறித்து Exclusive அப்டேட் கிடைத்துள்ளது.

துணிவு பொங்கல்

துணிவு பொங்கல்

அஜித் நடித்துள்ள துணிவு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித் - இயக்குநர் ஹெச் வினோத் - தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது. இதனிடையே, விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. விஜய் - அஜித் படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே தேதியில் ரிலீஸாக உள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைத்துள்ளது. இந்நிலையில், துணிவு படத்திற்கான தியேட்டர்களை புக்கிங் செய்யும் வேலைகளில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் பிஸியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

துணிவு ப்ளே லிஸ்ட்

துணிவு ப்ளே லிஸ்ட்

விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' வெளியாகி ஹிட் அடித்துள்ளதால், அடுத்து துணிவு படத்தில் இருந்தும் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிப்ரான் இசையில் அனிருத் பாடியுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் 'சில்லா சில்லா' என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. இந்தப் பாடல் நாளை (நவ 17) வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சில்லா சில்லா தர லோக்கலில் செம்ம குத்துப் பாடலாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

அஜித்தின் கெத்து சாங்

அஜித்தின் கெத்து சாங்

சில்லா சில்லா குத்துப் பாடல் என்பதால், அடுத்து ஒன்று அஜித்தின் கெத்து சாங்காக உருவாகியுள்ளதாம். முழுக்க முழுக்க அஜித்தின் மாஸ் காட்டும் வகையில் இசையில் ஜிப்ரான் தெறிக்கவிட்டுள்ளாராம். இந்தப் பாட்டு இன்ட்ரவல் ப்ளாக் அல்லது படத்தின் முக்கியமான சஸ்பென்ஸ் காட்சியின் போது இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. அஜித் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும் என துணிவு படக்குழுவினரே அடித்து கூறியுள்ளனர். இந்தப் பாடலை பாடியது யார் என்பதை மட்டும் படக்குழு சஸ்பென்ஸாக வைத்துள்ளதாம்.

இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கு

இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கு

துணிவு படத்தில் ஒரு குத்து சாங், அஜித்தின் கெத்து சாங் என இந்த இரண்டு பாடல்கள் போக, மேலும் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். அது, 'காசேதான் கடவுளடா' என்ற டைட்டிலில் ராப் சாங்காக உருவாகியுள்ளதாம். ஹிப் ஹாப் ஆதி இந்தப் பாடலை பாடியுள்ளதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை பின்னணியாக வைத்து ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 'காசேதான் கடவுளடா' என்ற பாடலின் டைட்டில் அதனை உறுதி செய்யும் வகையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தின் மூன்று பாடல்களுக்கும் கல்யாண் மாஸ்டர் கோரியோகிராபி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X