துணிவு சில்லா சில்லா ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு… அஜித் ரசிகர்களுக்கு சில் அப்டேட்

சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சில்லா சில்லா ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

பொங்கலுக்கு வெளியாகும் துணிவு

பொங்கலுக்கு வெளியாகும் துணிவு

அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. அஜித்துடன் மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கியுள்ளார். அஜித் - ஹெச் வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளையை பின்னணியாக வைத்து ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அஜித்தின் பைக் ஸ்டண்ட் சீன்ஸும் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சில்லா சில்லா ரிலீஸ் தேதி

சில்லா சில்லா ரிலீஸ் தேதி

துணிவு படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதால், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு பிஸியாக உள்ளது. இந்நிலையில், துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. 'சில்லா சில்லா' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், அனிருத் பாடியுள்ளார். மேலும், 'சில்லா சில்லா' சிங்கிள் அஜித்தின் இன்ட்ரோ சாங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் 17ம் தேதி வெளியாகவுள்ளதாம். அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமெண்ட் துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸிலும் தொடர்கிறது.

சில்லா சில்லா போஸ்டர்ஸ்

சில்லா சில்லா போஸ்டர்ஸ்

இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் சில்லா சில்லா பாடலின் ஃபேன் மேட் போஸ்டர் வெளியானது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. துணிவு படத்தின் சில்லா சில்லா போஸ்டர் வைரலாகி வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜிப்ரானும் தனது டிவிட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்திருந்தார். இயக்குநர் ஹெச் வினோத்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள ஜிப்ரான், "இயக்குநருடன் துணிவு படத்தின் இசை குறித்த மீட்டிங் முடிந்த பிறந்து எனது புன்னகை" என ஸ்வீட்டாக பதிவிட்டிருந்தார். இந்த சந்திப்பில் தான் துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி முடிவாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

அனிருத் குரலில் சில்லா சில்லா

அனிருத் குரலில் சில்லா சில்லா

துணிவு படத்தின் சில்லா சில்லா பாடலை அனிருத் பாடியுள்ளதால், இது செம்ம மாஸ்ஸாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் பாடல் பற்றி பேசியுள்ள அனிருத்தும், "எனது கேரியரில் ஹிட் லிஸ்ட்டில் ஒன்றாக சில்லா சில்லா பாடல் இருக்கும். இந்தப் பாடலை கேட்டால் அஜித் ரசிகர்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும்" என்றுள்ளார். அனிருத்தின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை இப்போதே பைத்தியம் பிடிக்க வைத்துவிட்டது. வரும் 17ம் தேதி துணிவு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுவதால், இதற்கான அபிஸியல் அப்டேட் எப்போது வேண்டுமானாலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X