பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொண்ட துணிவு பட நடிகர்!

சென்னை : டிக்டாக் தளம் மூலம் பிரபலமாகி அதன்மூலம் சினிமாவில் வாய்ப்பு பெற்றவர்களில் ஒருவர் டான்சர் ரமேஷ்.

ஜீ தமிழின் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்ற ரமேஷ், தொடர்ந்து துணிவு, ஜெயிலர் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டின் 10வது மாடியில் இருந்து விழுந்து ரமேஷ் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

டான்சர் ரமேஷ்

டான்சர் ரமேஷ்

டிக்டாக் மற்றும் ரீல்ஸ் மூலம் கவனம் ஈர்த்தவர் டான்ஸர் ரமேஷ். சென்னை புளியந்தோப்பில் வசித்து வந்த இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அவர்களுக்கு தலா 2 குழந்தைகளும் உள்ளனர். டிக்டாக் மூலம் புகழ்பெற்ற இவர் ஜீ தமிழின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கவனம் பெற்றார்.

 துணிவு படத்தில் நடித்த ரமேஷ்

துணிவு படத்தில் நடித்த ரமேஷ்

இந்நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து சமீபத்தில் வெளியான துணிவு படத்தில் சிறிய கேரக்டரிலும் இவர் நடித்திருந்தார். தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்திலும் ரமேஷ் நடித்துள்ளார். இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை ரமேஷ் கொண்டாடி வந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தன்னுடைய வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார்.

10வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை

10வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை

அவர் 10வது மாடியில் வசித்து வந்த நிலையில், அங்கிருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இரண்டு மனைவிகளுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரமேஷ் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. ரமேஷிற்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் மனைவிகளுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.

விபரீத முடிவெடுத்த ரமேஷ்

விபரீத முடிவெடுத்த ரமேஷ்

தனக்கு நடனம் மட்டுமே தெரியும் என்றும் வேறு தொழில் தெரியாததால் வறுமையில் வாடுவதாகவும் கடந்த ஆண்டில் ரமேஷ் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். தற்போது அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ள ரமேஷ், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துரதிர்ஷ்டவசமான முடிவு

துரதிர்ஷ்டவசமான முடிவு

எந்த விஷயத்திற்கும் தற்கொலை தீர்வாக இருக்க முடியாது என்று அதிகமாக கூறப்பட்டு வந்தாலும், பிரச்சினைகள் ஏற்படும்போது அதிலிருந்து தப்பிக்கும் முடிவாக தற்கொலையை தீர்வாக அதிகமானவர்கள் இருக்கும் நிலை உள்ளது. அந்த வகையில், இரண்டு குடும்பங்களின் தலைவனாக இருக்கும் ரமேஷின் இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானதாகவே பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X