ரெண்டு படங்களுக்கும் வெற்றி கிடைக்கணும்.. துணிவுப்பட இயக்குநர் சொன்ன விஷயம்!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் வரும் 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

அனைவருக்கும் பிடித்தமானவரான விஜய்யை இயக்க தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இயக்குநர்கள் காத்திருக்கின்றனர்.

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி 67 படத்திற்காக இணைந்துள்ளார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் இரு தினங்களில் வரும் 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. வெளிநாடுகளிலும் படத்தின் டிக்கெட் விற்பனை களைகட்டியுள்ளது. தமிழகத்திலும் ரசிகர்கள் படத்தின் டிக்கெட்டுகளை முந்தியடித்து வாங்கியுள்ளனர்.

ரசிகர்களின் பேவரைட் விஜய்

ரசிகர்களின் பேவரைட் விஜய்

விஜய் எப்போதுமே ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இயக்குநர்களுக்கும் பேவரைட் தான். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்திற்காக இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் ஷூட்டில் விஜய், மனோபாலா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

புதுமை விரும்பி விஜய்

புதுமை விரும்பி விஜய்

விஜய் அடுத்தடுத்த இயக்குநர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். புதியவர்களுடனும் இணைந்து பணியாற்றி வருகின்றார். சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். புதுமை விரும்பியான விஜய், கமெர்ஷியல் படங்களை கொடுத்தாலும் அதிலும் சமூக அக்கறையை வெளிப்படுத்தி வருகிறார்.

விஜய் குறித்து பேசிய ஹெச் வினோத்

விஜய் குறித்து பேசிய ஹெச் வினோத்

இதனிடையே துணிவுப்பட இயக்குநர் ஹெச் வினோத், விஜய் குறித்து தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். துணிவு படத்தின் பிரமோஷனுக்காக பேசியுள்ள ஹெச் வினோத், விஜய் சார் மிகவும் அமைதியானவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என்றும் ஆனால் அவர் கேமரா பிரேமிற்குள் வரும்போது வேறு மாதிரியாக மாறி விடுவார் என்றும் ஒரு பெரிய ராட்சசனாக நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

துணிவு -வாரிசு படங்கள் குறித்து ஹெச் வினோத்

துணிவு -வாரிசு படங்கள் குறித்து ஹெச் வினோத்

விஜய் மற்றும் அஜித் படங்கள் இந்தப் பொங்கலையொட்டி இன்னும் இரு தினங்களில் ஒரே நாளில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளன. இதுகுறித்து பேசிய ஹெச் வினோத், இரண்டு நாயகர்களுக்கும் இது வின் -வின் சூழலாக அமைய வேண்டும் என்றும் இருவருக்கும் லாபமும் வெற்றியும் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல இரு ஹீரோக்களின் ரசிகர்களும் சந்தோஷப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 விஜய்யுடன் இணைவாரா ஹெச் வினோத்?

விஜய்யுடன் இணைவாரா ஹெச் வினோத்?


அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை இயக்கியுள்ளார் ஹெச் வினோத். தற்போது துணிவு படத்தின் பிரமோஷன் பணிகளில் பிசியாக உள்ள அவர், அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணைந்து படமியக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் விஜய்க்கு ஹெச் வினோத் கதை சொல்லியுள்ளதாகவும் விரைவில் விஜய்யுடன் அவர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X