வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் சாதனையை சில மணிநேரங்களில் முறியடித்த துணிவு.. மாஸ் அப்டேட்!
சென்னை : நடிகர் அஜித்தின் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் இரண்டு போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு அப்டேட்களுக்காக ரசிகர்கள் போனிகபூர் கழுத்தில் கத்தி வைக்காத குறையாக கேட்ட நிலையில் தற்போது இந்தப் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 164 நாட்கள் ரசிகர்களின் காத்திருத்தலை தொடர்ந்து இந்த டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்தின் துணிவு
நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹெச் வினோத் மற்றும் போனிகபூருடன் கூட்டணி அமைத்துள்ள படம் துணிவு. முன்னதாக இந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்படாமல் ஏகே61 என்றே அழைக்கப்பட்டு வந்தது. இதனிடையே நேற்றைய தினம் படத்தின் டைட்டில் வெளியானது.

இரு போஸ்டர்கள் வெளியீடு
தொடர்ந்து நேற்றும் இன்றும் அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. நேற்று வெளியான போஸ்டரில் துப்பாக்கியுடன் அஜித் சாய்ந்திருப்பது போல காணப்படுகிறது. இதையடுத்து இது துணிவா அல்லது தூக்கமா என்று சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டது.

நாளை 3வது போஸ்டர்
தொடர்ந்து இன்று வெளியான போஸ்டரையும் வாரிசு படத்தின் போஸ்டரும் இணைந்து விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் 3வது போஸ்டரும் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் வாரிசு படத்தை போலவே அஜித்தின் துணிவு படத்திற்கும் டைட்டிலுடன் சேர்த்து 3 போஸ்டர்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாரிசு சாதனையை முறியடித்த துணிவு
இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய்யின் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரின் வாழ்நாள் சாதனையை சில மணிநேரங்களிலேயே முறியடித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் விஜய்யின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இதுவரை 23.5K ரீட்வீட் மற்றும் 72k ஹார்ட்ஸ் வாங்கியுள்ளது.

164 நாட்கள் கழித்து பர்ஸ்ட் லுக்
இந்நிலையில் நேற்று மாலை வெளியான அஜித்தின் துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 27K ரீட்வீட்ஸ் மற்றும் 72.4k ஹார்ட்ஸ்களை வாங்கி விஜய்யின் இதுவரையிலான பர்ஸ்ட் லுக் சாதனையை முறியடித்துள்ளது. படத்தின் பூஜை போடப்பட்டு ரசிகர்களை போனிகபூர் 164 நாட்கள் காக்க வைத்ததற்கான பலன் அவருக்கே கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











