வேறலெவல்.. வேறலெவல்.. துணிவு படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த போனி கபூர்!
சென்னை : நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு.
இந்தப் படத்தில் அஜித்துடன் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தின் கதை அமைந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித்தின் துணிவு படம்
நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. இந்தப்படம் இன்னும் இரு தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில்,முன்னதாக படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ட்ரெயிலர் அதிகமான வியூஸ் மற்றும் லைக்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

மூவர் கூட்டணி
முன்னதாக அஜித் -ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய நிலையில், தற்போது இந்தப் படத்தின்மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்னர். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை மற்றும் பாங்காக்கில் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்டமான செட்
ஐதராபாத்தில் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், மவுண்ட் ரோடு மற்றும் வங்கி என பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. இந்தப் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் அஜித் நடித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் ட்ரெயிலர் வேறுமாதிரியான கருத்துக்களை கொடுத்துள்ளது. இந்த ட்ரெயிலரில் மிரட்டலான அஜித்தை பார்க்க முடிந்தது.

எதிர்பார்ப்புகள் வேண்டாம்
இந்தப் படத்தை அதிகமான எதிர்பார்ப்புகளுடன் பார்க்க வரவேண்டாம் என்று முன்னதாக படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் மங்காத்தா, பில்லா படங்களில் நடித்த அஜித்தை எதிர்பார்த்து வர வேண்டாம் என்றும், இந்தப் படத்தில் துணிவு அஜித்தை மட்டுமே பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

துணிவு குறித்து போனிகபூர் பாராட்டு
படத்தின் பிரமோஷன் பல வகைகளில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. கடலுக்கு நடுவில் அஜித் ரசிகர்கள் பேனர்களை வைத்துள்ள சம்பவமும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் படம் குறித்து பேசியுள்ள படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், படம் வேறு லெவலில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நம்பர் 1 இடத்தில் நம்பிக்கை இல்லை
தனக்கு எப்போதுமே நம்பர் 1 மற்றும் நம்பர் 2வில் நம்பிக்கை இருந்ததில்லை என்றும் எப்போதுமே கதை தான் நம்பர் 1 இடத்தில் இருக்கும் என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். இதற்கு சமீபத்திய உதாரணம் லவ் டுடே படம்தான் என்றும், அதில் சிறப்பான கதை இருந்ததால்தான் மிகச்சிறந்த வெற்றியை படம் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











