துவங்கியது துணிவு படத்தின் பிரமோஷன்.. எங்கிருந்து துவங்கியிருக்காங்க பாருங்க!
சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படம் வெளியாக ஏறக்குறைய ஒன்றரை மாதங்கள் உள்ளது. ஆயினும் படத்தின் ப்ரமோஷனை தற்போது முதலே படக்குழு துவங்கியுள்ளது.
படத்தின் பாடல்களை அனிருத், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் பாடியுள்ளனர். அடுத்த வாரத்தில் படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு ரிலீசாகும் துணிவு
நடிகர் அஜித்தின் துணிவு படம் தீபாவளிக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிலபல தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தற்போது பொங்கலுக்கு தள்ளிப் போயுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம், பேங்காக் போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொங்கல் ரிலீசுக்கு படம் தற்போது தயாராகி வருகிறது.

அஜித்தின் துணிவு பட டைட்டில்
இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இரண்டு போஸ்டர்கள் மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தின் அறிவிப்பு வெளியாகி பூஜையுடன் ஐதராபாத்தில் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் 164 நாட்கள் கழித்தே படத்தின் டைட்டில் வெளியானது. நீண்ட நாட்கள் படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், படத்தின் டைட்டிலை மட்டுமே படக்குழு அறிவித்துள்ளது.

சில்லா சில்லா பாடல்
இந்நிலையில் படத்தின் சூட்டிங் தற்போது ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் சில்லா சில்லா பாடல் காட்சியும் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியரும் நடித்துள்ள நிலையில், இந்தப் பாடல் குத்துப் பாடலாக அமைந்துள்ளதாக தற்போது படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் முதல் வாரத்தில் பர்ஸ்ட் சிங்கிள்
இதனிடையே இந்தப் படத்தின் முதல் சிங்கிள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே படத்தின் ப்ரமோஷனையும் படக்குழு தற்போது துவங்கியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும் பிரமோஷன்களும் சிறப்பாக நடைபெறவுள்ளது. படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டுவரும் சூழலில் பிரமோஷனையொட்டி அவை வெளியிடப்பட உள்ளன.

திரையரங்குகளில் பேனர்கள்
இதனிடையே தற்போது சென்னையின் பிரபல திரையரங்குகளில் துணிவு படத்தின் பிரமோஷனையொட்டி படத்தின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் இதுவரை படக்குழு வெளியிடாத போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையில் தற்போதே படத்தின் ப்ரமோஷனை படக்குழு துவக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











