தீபாவளிக்கு முன்னாடி சூட்டிங்கை முடிக்கும் துணிவு படக்குழு.. 3வது போஸ்டர் தீபாவளிக்குதான் ரிலீசாம்!
சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் டைட்டில் மற்றும் இரண்டு போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தொடர்ந்து அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரித்த நிலையில் 164 நாட்கள் காத்திருப்பிற்கு பிறகே டைட்டில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அஜித்தின் துணிவு படம்
நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் ஜான் விஜய், சிபி சந்தன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில் ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தி முடித்துள்ளது. முன்னதாக பூனாவிலும் சூட்டிங் திட்டமிடப்பட்டு கேன்சலானது.

ரசிகர்களை கவராத டைட்டில்
முன்னதாக நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் ஹெச் வினோத், போனிகபூர் கூட்டணியில் இணைந்திருந்த நடிகர் அஜித், தற்போது மூன்றாவது முறையாக துணிவு படத்திலும் கூட்டணி அமைத்துள்ளார். இந்தத் தலைப்பு ரசிகர்களை அதிகமாக கவரவில்லை என்றாலும், அஜித் எந்த தலைப்பில் நடித்தாலும் கெத்து தான் என்று தெரிவித்துள்ளனர்.

பிரபல பேங்க் கொள்ளை
இந்தப் படம் வட மாநிலத்தில் நடைபெற்ற பிரபல பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி பெரிய வங்கிக் கொள்ளையை சாத்தியப்படுத்திய பிரபல கொள்ளையை இந்தப் படத்தில் கதைக்களமாக ஹெச் வினோத் எடுத்துள்ளார்.

பிரம்மாண்ட செட்
இதற்காக ஐதராபாத்தில் மவுண்ட்ரோடு மற்றும் பேங்க் உள்ளிட்டவற்றின் பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு நீண்ட நாட்கள் சூட்டிங் நடத்தப்பட்டன. இதனிடையே நிதி நெருக்கடி காரணமாக இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப்போனதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே தற்போது பாங்காக்கில் துணிவு படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரிலீசாகும் 3வது போஸ்டர்
இந்த சூட்டிங்கில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் விஜய், சிபி சந்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தீபாவளிக்கு முன்னதாக இந்த சூட்டிங்கை முடித்துக்கொண்டு சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே 2 போஸ்டர்கள் வெளியான நிலையில், படத்தின் மூன்றாவது போஸ்டர் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











