தேர்தலில் தனியா நில்லுங்க பாஸ்: ஏ.எம். ரத்னத்திற்கு அஜீத் அட்வைஸ்
சென்னை: தேர்தலில் தனியாக நிற்குமாறு அஜீத் கூறிய அறிவுரையைக் கேட்டு தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தனியாக போட்டியிடுகிறார்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்ய வரும் 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. தயாரிப்பாளர் சங்க தேர்தல் என்றாலும் தேர்தல் வேலைகளை தீயாக நடக்கிறதாம்.
தலைவர் பதவிக்கு தாணுவும், கேயாரும் போட்டியிடுகிறார்கள்.

விஜய் அணி
தாணுவுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தனது முழு ஆதரவை அளித்துள்ளதால் அந்த அணிக்கு விஜய் அணி என்று பெயர் வைத்துள்ளார்களாம்.

சூர்யா அணி
கேயாருக்கு சூர்யாவின் உறவினர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆதரவளிப்பதால் அந்த அணியை சூர்யா அணி என்றே அழைக்கிறார்களாம்.

ஏ.எம். ரத்னம்
தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பினார். இது குறித்து அறிந்த 2 அணிகளும் அவரை அணுகி தங்கள் அணியில் சேர்ந்து போட்டியிடுமாறு வலியுறுத்த மனிதர் குழம்பிவிட்டார்.

அஜீத்
தேர்தலில் போட்டியிட தான் ஆசைப்படுவதையும், அதில் வந்துள்ள சிக்கல் குறித்தும் ஏ.எம். ரத்னம் தான் தயாரிக்கும் ஆரம்பம் படத்தின் ஹீரோ அஜீத்திடம் கூறியுள்ளார்.

தனியாக நில்லுங்க
எந்த அணியில் சேர்ந்தாலும் மற்றொரு அணியின் பகை வந்து சேரும். அதனால் தனியாக போட்டியிடுங்கள் என்று அஜீத் அறிவுரை வழங்கியுள்ளார். இதை கேட்டு ரத்னமும் தேர்தலில் எந்த அணியிலும் சேராமல் தனியாக போட்டியிடுகிறார்.


Click it and Unblock the Notifications











