Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டாப் டென் கலெக்ஷனில் அஜித் படங்களின் இடம் இதோ!
சென்னை : சென்னையின் பிரபல திரையரங்கான வெற்றி சினிமாஸில் கடந்த 5 ஆண்டுகளில் வசூல் குவித்த படங்களின் டாப் டென் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டுக்கும் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பட்டியலில் 2012-ல் வெளியான அஜித்தின் 'பில்லா 2' படம் டாப் டென் வரிசையில் ஏழாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. 2013-ல் 'ஆரம்பம்' திரைப்படம் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

2014-ல் வெளியான 'வீரம்' ஐந்தாவது இடத்தை விஜய்யின் 'ஜில்லா' படத்தோடு பகிர்ந்துகொண்டுள்ளது. 2015-ல் வெளியான 'வேதாளம்' திரைப்படம் வசூல் குவித்து டாப் டென் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கிறது. 2016-ல் அஜித் படம் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#VettriTopTen Recap 2012-2016
— Rakesh Gowthaman (@VettriTheatres) November 28, 2017
(Based on total audience)#Thuppakki #Singam2 #Kaththi #Baahubali #Kabali pic.twitter.com/7sF8qfgwAN
இந்தப் பட்டியலில் வருடத்தின் டாப் 1 இடத்தில் எந்த அஜித் படங்களும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் மூன்றாவது இடம் பிடித்ததே அஜித் படங்களின் அதிகபட்ச சாதனையாகப் பதிவாகி இருக்கிறது. இந்த மதிப்பீடு வெற்றி தியேட்டரின் வசூல் அடிப்படையில் வெளியிடப்பட்டது.