வெளிநாட்டில் சுற்றுப்பயணம்.. அஜித்தின் கலக்கல் புகைப்படங்கள் -வீடியோ இதோ!
சென்னை : நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது.
ஒரு மாதத்தை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தன்னுடைய குடும்பத்தினருடன் லண்டன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட இடங்களில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

நடிகர் அஜித்
நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹெச் வினோத் -போனிகபூருடன் மூன்றாவது முறையாக அஜித் அமைத்த இந்தக் கூட்டணி அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

துணிவு படம்
படத்தில் மஞ்சுவாரியர் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியானது. படத்தில் ஆக்ஷன் காட்சிகளும் தூக்கலாக அமைந்திருந்தது. படம் திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

வெளிநாட்டு சுற்றுலா
இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும்வகையில் நடிகர் அஜித் தன்னுடைய குடும்பத்தினருடன் லண்டன், ஸ்காட்லாந்து உள்ளிட்ட இடங்களில் குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது அஜித் தனியாகவும் ரசிகர்களுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

அஜித் புகைப்படங்கள்
இந்நிலையில் அழகான பின்புலத்தில் நடிகர் அஜித் ஸ்மார்ட்டான லுக்கில் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் அஜித் கார் ஓட்டும் வீடியோவும் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

விரைவில் ஏகே62 அப்டேட்
தன்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் அஜித் நாடு திரும்பியுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்ததாக ஏகே62 படத்தின் அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே62 படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், படத்தை லைகா நிறுவனம் இயக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications











