அஜீத் படங்கள்: ரிலீசாகும் போதாவது தலைப்பு வைக்கிற ஐடியா இருக்கா?

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஏஎம் ரத்னம் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தன் போர்ஷனை முழுவதுமாக முடித்துக் கொடுத்துவிட்ட அஜீத், அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்துக்குப் போய்விட்டார்.
ஆனால் இன்னும் தலைப்பே சூட்டவில்லை. கேட்டால், தலைப்பை அறிவித்ததும் பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ரசிகர்களே அந்தப் பெயரில் தனி பக்கங்கள், ஆன்ட்ராய்ட் - ஐபோன் ஆப்ஸ் போன்றவற்றை உருவாக்கிவிடுகின்றனர். அதனால்தான் அறிவிக்கவில்லை என்றனர். சில தினங்களில் படத்துக்கு தலைப்பு வலை என்றார்கள். பின்னர் இல்லை இல்லை.. இன்னும் வைக்கவில்லை என மறுத்தனர். இது க்ரைம் த்ரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ட்ரைலரைக் கூட பெயர் இல்லாமலேயே வெளியிட்டுவிட்டனர். தமிழில் இப்படி ட்ரைலர் வெளியானதே இதுதான் முதல் முறையாக இருக்கும் போலிருக்கிறது.
இப்போது சிவா இயக்கத்தில், விஜயா நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கும் தலைப்பு வைக்கவில்லை. ஆரம்பத்தில் வெற்றி கொண்டான் என்று வைத்திருப்பதாக கூறப்பட்டது. பின்னர் அதை மறுத்துவிட்டனர். இது கிராமத்துக் கதை. முதல் முறையாக அஜீத் கிராமத்து இளைஞராக நடிக்கிறாராம்.
படம் ரிலீசாகும்போதாவது பெயரை அறிவிப்பீங்களா?


Click it and Unblock the Notifications











