“துணிவு“அடுத்தடுத்த அப்டேட்..யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்..படக்குழு அறிவிப்பு!
சென்னை : துணிவு திரைப்படத்தின் அடுத்தடுத்த கதாபாத்திரங்களின் பெயரை படக்குழு வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தில், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

துணிவு
பொங்கலுக்கு வெளியாக உள்ள துணிவு படத்தை அனைவரும் எதிர்பார்த் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் இருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டார் என மூன்று பாடல்கள் வெளியாகி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, சில காட்சிகளை இப்ப தான் பார்த்தேன். நிறைய பட்டாசு வாங்கிக்கோங்க... என அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

கிருஷ் ரோலில்
இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். அதன்படி, சார்பட்ட பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த, ஜான் கொக்கைன் கிருஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கான கேரக்டர் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

அடுத்தடுத்த அப்டேட்
பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் "மை பா" எனும் தொலைக்காட்சி செய்தியாளர் கேரக்டரில் நடிப்பதாகவும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் மக்களிடையே பிரபலமான நடிகர் பிரேம், பிரேம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

யார் யாருக்கு என்னென்ன
அதேபோல, சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜி எம் சுந்தர் முந்தழகன் வேடத்திலும், ராஜதந்திரம், நடுநிசி நாய்கள் படத்தில் நடித்த நடிகர் வீரா ராதா என்ற கதாபாத்திரத்திலும், அஜய் ராமச்சந்திரன் கதாபாத்திரத்திலும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் படத்தின் மூலம் பிரபலமான பக்ஸ், ராஜேஷ் என்ற போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக துணிவு படம் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











